உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

24 அப்படிப் போர் செய்கின்ற திறமைமிக்க மன்னர் களைப்பற்றியும் மற்ற வீரர்களைப் பற்றியும்தான் உனக் குச் சொல்லப் போகிறேன். அதற்குத்தான் ஆட்டுக் கடா சண்டையைப் பார்க்கச் சொன்னேன்." "ஆம், அண்ணா! நீங்கள் சொல்லுவது உண்மைதான். ஆட்டுக் கடா சண்டையில், பலமாக மோதுவதைத்தான், நான் முக்கியம் என்று எண்ணினேன். நீங்கள் அது முக்கியம் என்று சொல்லவில்லையே! ஏன் அண்ணா அப்படி?" "இந்தக் கேள்வியே முக்கியமான கேள்விதான் தம்பி! மோதிக் கொள்ளுவது எல்லாச் சண்டையிலும்தான் பார்க் கின்றோமே! அப்படியென்றால், ஆட்டுக்கடா சண்டையை ஏன் தம்பி உனக்குக் குறிப்பாகக் காட்டுகிறேன். ஆட்டுக் கடா சண்டையில், அந்தக் கடாக்கள் காலைப் பின்வாங்கிப் போகின்றதே அதுதான் குறிப்பாகக் கவனிக்கவேண்டிய சிறப்பு!” "அப்படியா அண்ணா! கேட்க கேட்க புதுமையாக இருக்கின்றதே! \ புதுமை தான் தம்பி புதுமை ! உன்னை இப்போது ஒரு கேள்வி கேட்கப்போகிறேன். சொல்லுகிறாயா? போர் வீரனுக்கு இருக்கவேண்டிய குணம் வீரம் என்று எல்லோரும் சொல்லுவது உண்மைதான்! அந்த வீரத்தையும் மேலோங் கச் செய்கிற குணம் உனக்கு நினைவிருக்கிறதா, தம்பி!’ 'இப்போது நினைவுக்கு வரவில்லை அண்ணா! நீங்களே சொல்லி விளக்குங்கள், நான் சிறுபிள்ளைதானே!" ஆமாம்: ஆமாம். நீ கெட்டிக்கார சிறுபிள்ளைதான்! அதுதான் ஊக்கம் என்கிற குணம் தம்பி. - ஆமாம் அண்ணா! ஊக்கமது கைவிடேல்' என்று படித்தது எனக்கு நினைவுக்கு வருகிறது.” -