உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

26 எழுதிக்கொண்டேன் அண்ணா.” 'குறட்பாவை எழுதிக்கொண்டது சரிதான் தம்பி! இன்னும் கொஞ்சம் விளக்கம் தருகிறேன்.” தகர்' என்றால் ஆட்டுக்கடா என்று பொருள்.’ பொருதகர்' என்றால் என்ன அண்ணா? சொல்லமாட்டேனா தம்பி! பொருதகர், என்றால் சண்டை செய்கிற ஆட்டுக்கடாக்கள் என்பதாகும்.’ 'கால்களைப் பின்னே வாங்கிப்போனதைப் பார்த்தா யல்லவா? அதைக் குறிப்பிடுவதுதான், பேரும் தகைத்து' என்னும் சொற்கள். பலமாகத் தாக்குவதற்காகத்தான், அப்படி பின்வாங்கிச் சென்றன என்பதைத்தான், தாக் கற்குப் பேரும் தகைத்து’ என்னும் தொடர் குறித்துக் காட்டுகிறது. ஊக்கமுடையவன் ஒடுங்கி நிற்கும் காரணம் இப்போது புரிகிறதா?” "இன்னுமா அண்ணா புரியாமல் இருக்கும்! எனக்குக் கூட அதிகமான ஊக்கம் பிறந்துவிட்டது!’ அப்படியா தம்பி! மிக்க மகிழ்ச்சி. அதிகமான குறட் பாக்களைப் படிக்க வேண்டியதுதான்!”