உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28

28 கார்ந்தது. ஏதோ இரை கிடந்தது. பார்த்து ஒன்றிரண்டு முறை தனது மூக்கினால் கொத்திற்று. பிறகு கா. கா’ என்று சத்தம் போட ஆரம்பித்தது. ஒவ்வொரு காகமாக வந்தது. எல்லாம் போட்ட சத்தத்தில் நிறைய காகங்கள் கூடிவிட்டன.” தம்பி, நன்றாக வரிசையாகச் சொல்லி விட்டாயே! எனக்கே ஏதோ கதை கேட்பது போலத் தோன்றுகிறது. காகங்கள் ஒன்றாகச் சேர்ந்த விதத்தைப் புரிந்து கொண்டா யல்லவா? - புரிந்து கொண்டேன் அண்ணா.' மற்ற பறவைகளிடத்தில் இப்படிப்பட்ட குணம் கிடை யாதென்று உனக்குத் தெரியுமா தம்பி!' "ஆம், தெரியும் அண்ணா: இதுமாதிரி சத்தம்போட்டுக் கூப்பிடுகிற பழக்கம் மற்ற பறவைகளிடத்தில் கிடையாது அண்ணா! நானும் பார்த்தது கிடையாது.” 'தம்பி! இந்தக் குணம் காகத்தினிடத்தில்தான் இருக் கின்றது. ஆதலால்தான் திருவள்ளுவர் காகத்தைக் காட்டி பெரிய உண்மையை நமக்குப் போதிக்கின்றார்.' அப்படியா அண்ணா! அந்தக் காக்கா குறட்பாவை உடனே சொல்லுங்கள் அண்ணா!' வேடிக்கையாகப் பேசுகிறாய், தம்பி! அது காக்கா குறட்பா அல்ல! காகத்தைப் பற்றிப் பேசுகின்ற குறட்பா. குறட்பா சொல்லுவதற்கு முன்பு, உனக்கு விளக்கம் சொல்லவேண்டுமல்லவா? ஆம் அண்ணா சொல்லுங்கள்." 'காகம் எப்போதும் தனித்து இருந்து சாப்பிடாது. இது மிகவும் சிறப்பான குணம். இதை நன்றாக நினைவில்