உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

30 வைத்து சாப்பிடுகிற கெட்ட குணம் அதனிடம் கிடையா தண்ணா!' தம்பி! இந்த நல்ல குணத்தை நாமும் கற்றுக்கொள்ள வேண்டாமா?? கற்றுக்கொள்ளத்தான் வேண்டும் அண்ணா! எவ்வ ளவோ நல்ல குணங்கள் இயற்கையில் பறவைகளிடம் இருக் கின்றன. அண்ணா!' y 'தம்பி! இப்போது மொத்தத்தில் பொதுவான நல்ல குணம் காகத்தினிடம் இருப்பது என்ன தெரியுமா? தன் னுடைய இனமாகிய சுற்றத்தார்களை எப்போதும் சேர்த் துக்கொண்டே வாழ்கின்றன.” அது உண்மையிலும் உண்மையான குணம் அண்ணா! நான் ஒன்று பார்த்தேன். அதைச் சொல்லட்டுமா 1: சொல் தம்பி! நானும் தெரிந்துகொள்ளுகின்றேன்." "ஒரு தட்வை, எங்கள் தெருவில் ஒரு காகம் இறந்து விட்டது. உடனே எல்லா காகங்களும் பெரிய சத்தம் போட்டு ஒன்றாகக் கூடிவிட்டன. காகங்கள் கரைந்து இன மெல்லாம் ஒன்று சேர்ந்தன. பார்ப்பதற்கு மிகவும் பரிதாப மாக இருந்தது, அண்ணா! என்ன மாதிரியான ஒற்றுமை!’ 'தம்பி! நல்ல நிகழ்ச்சியை நினைவுபடுத்தினாய் தம்பி! உண்ணுகிற மகிழ்ச்சியிலும் ஒன்றாகச் சேருகின்றன. இறந்துவிட்ட துன்பத்திலும் ஒன்றாகக் கூடிவிடுகின்றன. எவ்வளவு அருமையான பண்பாடு பார்த்தாயா, தம்பி!” நாம் ஒவ்வொருவரும் காகம் மாதிரிதான் இருக்க வேண்டும். ஏன் அண்ணா நான் சொல்வது சரிதானே! இன்னும் குறட்பாவையே சொல்லவில்லையே அண்ணா!'