உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

31

'இதோ சொல்லப்போகிறேன் தம்பி! அதற்குள் இன் னொரு செய்தியும் உனக்குச் சொல்லிவிடவேண்டும்.” "சொல்லுங்கள் அண்ணா.” 'காக்கையின் இனம் ஒற்றுமையாக இருப்பதால் எவ்வ ளவு நன்மையுண்டாகிறது பார்த்தாயா? எல்லாம் இன்ப மாக இருக்கமுடிகிறது. துன்பத்திலும் ஒன்று சேர்ந்து உதவி யாக வருகின்றன. ஆதலால், சுற்றத்தைத் தழுவி வாழ்வ தால் எவ்வளவு நன்மையும், பெருமையும், ஆதரவும் உண் டாகிவிடுகிறது பார்த்தாயா, தம்பி! இப்போது குறட்பா சொல்லுகிறேன். எழுதிக்கொள் தம்பி! காக்கை கரவா கரைந்து உண்ணும் ஆக்கமும் அன்ன நீரார்க்கே உள. - எழுதிக்கொண்டாயா தம்பி!' எழுதிக்கொண்டேன் அண்ணா!' கரவா’ என்பதற்கு என்ன அர்த்தம் தெரியுமா தம்பி!’ சொல்லுங்கள் அண்ணா!' " கரவா’ என்றால் மறைத்து வைக்காமல் என்ப தாகும்.” 'காக்கை கரவா’ என்றால் காகம் மறைத்துவைக்காது என்பது புரிந்துவிட்டது அண்ணா!' கரைந்து உண்ணும்' என்பது தெரிகிறதா தம்பி!' "அதுவும் புரிந்துவிட்டதே. காகம் சத்தம் போட்டு தன்னுடைய சுற்றத்தார்களைக் கூப்பிட்டு, சேர்ந்து சாப் பிடும். சரிதானே அண்ணா!'