உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

32 சரியாகச் சொல்லிவிட்டாயே! அதுதான் அதனுடைய அர்த்தம். இன்னும் சொல்லுகிறேன் கேள். ஆக்கம் என்றால், செல்வாக்கு, பெருமை, சிறப்பு, ஆதரவு என்றெல் லாம் பொருள் ஆகும். காகத்தைப் போன்ற இந்த நல்ல குணம் கொண்டவர்களுக்கு எல்லா ஆக்கமும் வந்து சேரும். பெருமை உண்டாகும். சுற்றத்தார் ஆதரவு இருக்கும். இது மாதிரி எவ்வளவோ உண்டாகும்.' அன்ன நீரார்க்கே உள’ என்பதையும் விளக்கிச் சொல்லுங்கள் அண்ணா? சொல்லாமலா இருப்பேன். சொல்லுகிறேன் தம்பி. உள’ என்றால் உண்டு என்பது பொருளாகும். அன்ன நீரார்க்கே’ என்றால் அப்படிப்பட்ட குணம் உள்ளவர்க்குஎன்பது அர்த்தம். அந்தக் காகம் போன்று, அப்படிப்பட்ட குணம் உள்ளவர்களுக்கு எல்லாம் உண்டு. தெரிகிறதா தம்பி!' தெரிகிறதே! அப்படிப்பட்ட குணம் கொண்டவர் களுக்கு எல்லா ஆக்கமும் வந்துசேரும். எல்லா செல்வாக்கும் இருக்கும். நான் சொல்லுவது சரிதானே அண்ணா!' "மிகவும் தெளிவாகப் புரிந்துகொண்டாய் தம்பி! நீ சொல்லுகின்ற விளக்கம் உனக்கு நன்றாகப் புரிந்துவிட்ட தைக் காட்டுகிறது. உனக்கு வேறு என்ன விருப்பம் சொல்.’