உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வள்ளுவர் காட்டிய வழி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38

38 தம்பி, நான் சொல்லி விளக்க வேண்டியதை நீயே சொல்லிவிட்டாயப்பா! உன் அறிவு நன்றாக வளர்ந்து வருகிறதே! தம்பி! இன்னொன்று கவனித்தாயா? அது என்ன அண்ணா? அது கொத்தி மீனைப் பிடித்ததே அது எப்படி இருந்தது?" அடடா! அதை எப்படி யண்ணா சொல்லுவேன். ஒரு நொடிப் பொழுதுகூட ஆகவில்லையே! அது கொத்தியதும் மீனைப் பிடித்ததும், உள்ளே விழுங்கியதும் எல்லாம் மாய மந்திரம்’ போல் நடந்துவிட்டதே!’ அதற்காகத் தான் தம்பி கேட்டேன். நேரம் வந்ததும் அந்தக் கொக்கின் செயல் எப்படி இருந்தது? நேரத்தினை ஒரு கணப்பொழுதுகூட வீணாக்கவில்லை யண்ணா! தாமதமாகவும் செய்யவில்லை! விரைந்தோடி வேலையை முடித்துக்கொண்டதே!’ இப்போது தெரிகிறதா தம்பி! தக்க நேரம் வரா விட்டால் நாம் எப்படி இருக்கவேண்டும் என்று!” "நாம் பொறுமையாகத்தான் அண்ணா இருக்க வேண்டும். ஆனால் நேரத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் அண்ணா!' இனி உனக்கு அதிகம் விளக்கவேண்டியதில்லையே தம்பி! நீ நன்றாகப் புரிந்துகொண்டாய்.” அப்படிச் சொல்லிவிடாதீர்கள் அண்ணா! எனக்குத் தெரிந்ததைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சொல்லுகிறேன். இன்னும் நீங்கள் விளக்கம் கொடுத்தால்தான் தெளிவாகப் புரியும். - சரி, தம்பி, குறட்பாவைச் சொல்லுகிறேன். எழுதிக் கொள்.’ -