அதொன்றும் இல்லை. மறுநாள் நாவலின் கதாபாத்திரங்கள் குறித்து, கதைப்பின்னல்கள். மர்மங்கள். பாத்திரங்களின் சாகசங்கள் பற்றி எல்லாம் சுவையாகப்
பேசி மகிழ்வார்கள் :
திகம்பர சாமியாரின் சாமர்த்திய வேலைகளும், வடுவூராரின் வர்ணனைத் திறமும், வை. மு. கோதை நாயகியின் பாலாமணி அல்லது பக்காத் திருட னில் உள்ள திகில் கட்டங்களும், ஜே. ஆர், ரங்கராஜூவின் சந்திர காந்தா நாவல் பண்டார சன்னிதிகளின் மோசவேலை களை அம்பலப் படுத்துவதையும், மற்றும் அவை போன்ற ரசமான விஷயங்களையும் நினைத்து நினைத்து ரசித்துப் பேசுவது அவர்களுக்கு இனிய பொழுது போக்காக அமைந்தது.
1930-களின் முதல் பாதியில் நிகழ்ந்த விஷயம் இது. அப்பொழுது -1920 களிலேயே - இந்த ரகமான நாவல்கள் வாசகர்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்தன.
சிறிதளவு படிக்கத் தெரிந்தவர்கள் و حسب مهنة கிராமங்களில் கூட, வடுவூர், ஆரணி, ரங்கராஜா, கோதைநாயகி நாவல்களை விரும்பிப் படித்திருந்தார்கள். ‘தாம் பெற்ற இன்பம் சின்னப் பையன்கள் பெற்று விடக் கூடாது என்று விழிப்பாகவும் இருந்தார்கள். 'நாவல்களைப் படிக்கக் கூடாது. அவை மனசை கெடுத்து விடும்! என்று உபதேசிக்கவும் செய்தார்கள்.
ஆங்கிலக் கல்வி பெற்றிருந்தவர்களும், உயர் நிலைப் பள்ளியில் அறவொழுக்கம் கற்றுத் தந்த உபாத்திமார்களும், எச்சரிக்கத் தவறுவதில்லை.
இ வாசகர்களும் விமர்சகர்களும் 5