"டாக்டர், ஜெகில் அன்ட் மிஸ்டர் ஹைட் என்ற அவாரஸ்யமான நாவல் கு. ப. ராஜகோபாலன் தமிழாக்கமாக இரட்டை மனிதன்' என்ற பெயரில்
வெளி வந்தது.
அயர்லாந்து சுதந்திரத்துக்காகப் போராடிய டிவேலராவின் முயற்சிகளுக்குத் துணை நின்ற மைக்கேல் காலின்ஸ் வரலாறு அடுத்த புத்தகமாகப் பிரசுரமாயிற்று.
இவற்றை எல்லாம் வாசகர்கள் வாங்கிப் படிக்கத்
தான் செய்தார்கள் .
இரண்டாவது மகாயுத்தம் நீடித்து வளர்ந்த காலம் శ్రీశ్రీ. பொருள்களின் தட்டுப்பாடும், விலைவாசி உயர்வும் தொடர்ந்து வளர்ந்தன. விலை ஏற்றம் என்பது சகல துறைகளிலும் அழுத்தமாகக் கால் பதித்து அமுக்கியது.
புத்தகங்களின் விலையும் உயர்ந்தே ஆகி வேண்டிய நிலைமை உண்டாயிற்று. நவயுக பிரசுராலயம் குறைந்த விலைப் புத்தக வெளியீட்டு முயற்சியை நிறுத்திக் கொண்டது. விலை உயர்ந்த, பெரிய புத்த கங்களைப் பிரசுரிப்பதில் கவனம் செலுத்தலாயிற்று.
முப்பதுகள் காலகட்ட த்தில், நியாயமான விலையில் பிரசுரிக்கப்பட்டிருந்த, கவி சுப்பிரமணிய பாரதியின் நூல்கள்-கட்டுரைகள்: 1. சமூகம் 2. மாதர் 3. கலைகள் 4. தத்துவம்; ஞானரதம், தாசு மற்றும் ஸ்ட்ரே தாட்ஸ் போன்றவை- வாங்குவாரின்றிக் கடைகளில் பழுப்பேறிக் கொண்டிருந்தன என்பதையும் குறிப்பிடத் தான் வேண்டும்.
இ வாசகர்களும் விமர்சகர்களும் 32