கவி ரவீந்திரநாத தாகூரின் கதைகள் பலவற்றை சுப்பிரமணிய பாரதியும் ,வ வெ. சு. ஐயரும் தமிழாக்கி இந்நாட்டின் வாசகர்களுக்கு அறிமுகம் செய்திருந்தனர்.
இவை எல்லாம் புத்தகங்களாகவும் வந்திருந்தன. அவை பரவலான கவனிப்பைப் பெற்றிருந்தன என்று சொல்வதற்கில்லை.
1930 - களில் பத்திரிகைகள் பல்வேறு விதமான கதைகளையும் பிரசுரித்து, வாசகர்களுக்குப் புதுவிதமான சிறுகதைகள் மீது ஒரு ருசி ஏற்படுத்தின.
'கல்கி'யின் கதைகளுக்கு மிகப் 憩“ST余)肝6°F பாராட்டும் வரவேற்பும் கிடைத்துக் கொண்டிருந்தன. கல்கி பாணியில் கதை எழுதுவோர் பலராயினர்.
ஆழ்ந்த, கனமான, சோதனை ரீதியில் அமைந்தவிதம் விதமான நடைகளைக் கையாண்டு எழுதப்பட்டசிறுகதைகளை மணிக்கொடி எழுத்தாளர்கள் படைத்து வந்தனர்.
இவர்களது முயற்சிகளை விரும்பி வரவேற்றுப் படித்து மகிழ்ந்து, அவை பற்றிப் பேசி இன்புறும் ரசிகர்கள் வாசக உலகத்தில் குறைவாகத் தான் காணப்
பட்டார்கள்.
பத்திரிகைகளில் வெளிவந்த கதை க ைள ப் புத்தகமாகப் பிரசுரித்தால் வாசகர்களின் ஆதரவு இருக்கும் என்ற நம்பிக்கை சிலரை அம்முயற்சியில் ஈடுபடத் தூண்டியது.
இ வாசகர்களும் விமர்சகர்களும் 35