நாவலை எழுதி முடித்த பிறகு, தியாக பூமி' என்ற தேசீய, சமூக சீர்திருத்த மற்றும் பெண்ணுரிமைப் போராட்டங்கள் கலந்த நாவலைத் தொடர்கதையாக
வெளியிட்டார்.
அதே சமயத்தில், அந்த நாவல் திரைப்படமாகவும் தயாரிக்கப்பட்டது. அக்காலத்திய புகழ் வாய்ந்த நடிகை எஸ். டி. சுப்புலட்சுமி, பாபநாசம் சிவன் முதலியோர் நடித்து, கீர்த்தி பெற்ற டைரக்டர் கே. சுப்பிரமணியம் இயக்கிய படம் அது. அந்தப் படத்தில் வரும் காட்சிகள் விகடன் தொடர்கதையில் வாரம் தோறும் எடுப்பாக அச்சிடப்பட்டன. ஆகவே, தியாகபூமி’ படத்தையும், தொடர்கதையையும் ஆவலுடன் எதிர்பார்த்த ரசிகர்கள் தொகை அதிகமாகவே இருந்தது.
இந்நிலையில், நாவல் உலகில், ஒரு புதிய அலை தலையெடுத்தது. வி. ஸ். காண்டேகர் என்ற மராத்தி எழுத்தாளரின் கருகிய மொட்டு’ நாவல், கா. பூணி, பூரி. மொழி பெயர்ப்பில் புத்தகமாகப் பிரசுரம் பெற்றது. அதற்கு முன்னதாக, காண்டேகரின் நாவல் வெறும் கோயில் கலைமகள் வெளியீடாகப் புத்தக உருவில் வந்திருந்தது.
காண்டேகர் திறமை வாய்ந்த எழுத்தாளர். யதார்த்த சமூக நிலைமைகளை, கற்பனை அழகோடு, கவிதை நடையில் நயமான சிந்தனைகளும் புதுமையான உருவகக் கதைகளும் நெடுகிலும் மிளிர, அவர் நாவல்களில் சித்திரித்தார். பெண்கள் மீது அனுதாபம்
இ வாசகர்களும் விமர்சகர்களும் 39