§§ வாழ்க்கைச் சுவடுகள் கட்டுரைகளுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால், கம்ப சித்திரங்கள் முடிவு பெற்ற சிறிது காலத்திலேயே பியூரீ சித்திர ராமாயணம்' என்ற தலைப்பில் ராமாயணக் காட்சிகளை விரிவாக எழுதலானார். அவற்றுக்கு 'சித்ரலேகா என்ற ஓவியர் தனிரகமான சித்திரங்கள் வரைந்து வந்தார்) விகடன் அட்டையைப் பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து தேர்ந்தெடுத்த பாடல்களுக்கு வசீகரமான ஒவியங்களாகத் தீட்டப்பெற்ற வர்ணப்படங்கள் அலங்கரித்தன. பியூரீ நயமான சித்திர விளக்கக் கட்டுரைகள் எழுதினார். இவை எல்லாம் இலக்கியப் பயிற்சிக்கு உதவின. பெங்களுர் கந்தரம் என்பவர் 'ஆனந்த ரகசியம் என்ற தலைப்பில் யோகாசனங்கள் பற்றிய கட்டுரைகளைத் தொடர்ந்து எழுதினார். ஆசனப் பயிற்சிக்கு வழிகாட்டும் கட்டுரைகளைத் தனிச் சுவையுடன் எழுதிவந்தார் அவர் ஆசனங்களை அறிமுகப்படுத்திய பிறகு உடல் ஆரோக்கியத்துக்கு ஏற்ற ஆலோசனைகளை ஆரோக்கிய ரகசியம்' எனும் தலைப்பில் எழுதினார். அனைத்தும் பயனுள்ள கட்டுரைகள். விகடன் மூலம் யோகாசனம் பற்றித் தெரிந்து கொண்டு அவற்றைப் பயின்று பயன்பெற்றவர்கள் பலராவர். நாங்கள் மூன்று பேர் - அண்ணா, நான் சக்திசங்கர் என்ற நண்பர் உறவினரும் கூட - தினசரி மாலை நேரத்தில் ஆற்று மணலில் யோகாசனங்கள் செய்து பழகினோம். நான் ராஜவல்லிபுரத்தை விட்டு வெளியூர் போகிற நாள் வரை சுமார் ஒன்றரை வருட காலம்-ஆசனப்பயிற்சியை விடாது செய்து வந்தேன். சக்திசங்கர் - சங்கர நாராயணன் என்பது அவரது பெயர். சிறிது காலம் அவர் சத்தி வழிபாட்டில் ஆர்வம் கொண்டிருந்தார். அதனால் சக்தி சங்கர் ஆனார் - மணிக்கொடி இதழ்களை பைண்டு வால்யூம்களாக வைத்திருந்தார். அவற்றை அவர் எங்களிடம் தந்துவிட்டார். மணிக்கொடியில் இருந்த புதுமைப்பித்தன் கதைகள், 'யாத்ரா மார்க்கம் பகுதியில் வந்த இலக்கிய சர்ச்சைகள், ந. பிச்சமூர்த்தி, கு.ப. ராஜகோபாலன். பி.எஸ். ராமையா, மெளனி முதலியவர்களின் கதைகள் என்னைப் பெரிதும் ஈர்த்தன. இத்தகைய சிறுகதைகளை நான் எழுத வேண்டும் என்று ஆசைப்பட்டேன். எழுதலானேன். எழுதுவதற்கு அவசியம் உண்டாக்கிக் கொள்வதற்காக 'இதய ஒலி என்ற கையெழுத்துப் பத்திரிகையைத் தொடங்கினேன். ஒவ்வொரு மாதமும் இதழைக் கொண்டு வரவேண்டும் என்ற கட்டாயம் இருந்ததால், அதில் அதிகம் எழுதினேன். நானே கதை, கட்டுரை, கவிதை என்று பலவற்றையும் எழுதினேன். சித்திரங்களும் வரைந்தேன். என் அண்ணா, சக்தி சங்கர், மற்றும் ஓரிருவர் இதயஒலியின் வாசகர்களானார்கள், நான் எழுதியவற்றை எல்லாம் படித்துப் பாராட்டினார்கள்.
பக்கம்:வாழ்க்கைச் சுவடுகள்.pdf/37
Appearance