பக்கம்:வாழ்க்கை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

வாழ்க்கை


அவனுடைய உள்மனம் கூறுவது பொருளற்றதாக இருக்க முடியாது என்று அவன் தீர்மானிக்கிறான். ‘உலகம் முழுதும் எதிராக இருந்து, என் உள்மனம் மட்டும் தனித்து நின்றாலும், அதையே நான் நம்புவேன்!’ என்ற முடிவுக்கு வருகிறான்.

‘நான்’ என்ற உணர்ச்சியுள்ள அவனுடைய அகம் இரண்டு பிரிவாகக் காட்சியளிக்கிறது : ஒன்று, அவன் வாழவேண்டும் என்று பணிக்கிறது. மற்றது, (பகுத்தறிவு) அவன் வாழ முடியாது என்று கூறுகிறது.

மனிதன் தான் இரு பிரிவாகப் பிரிந்திருப்பதை உணர்கிறான். இந்தப் பிரிவு அவனைச் சித்திரவதை செய்து, அவன் ஆன்மாவையே பிளக்கிறது.

இந்தப் பிரிவுக்கும் துன்பத்திற்கும் தன் அறிவே காரணம் என்று அவனுக்குத் தோன்றுகிறது.

அந்த அறிவு- பகுத்தறிவு-மனிதனுடைய விலை மதிக்க முடியாத தலைசிறந்த செல்வம். அவன் வாழ்வுக்கு அது இன்றியமையாதது. பிறக்கும்போது அவன் நிர்வாணமாக ஒரு கதியுமின்றித் தோன்றியவன். அந் நிலையில், இயற்கையின் கோரமான அழிக்கும் சக்திகளின் நடுவே அவன் உயிரோடு இருக்கவும், உபயோகித்துக் கொள்ளவும் தேவையான பொருள்களை அளிப்பதும் அந்த அறிவு தான். இவ்வாறு உதவியாகவுள்ள அந்த அறிவே அவன் வாழ்வை விஷமாக்குகிறது!

அவனைச் சுற்றிலுமுள்ள பிராணிகள் தமக்கு அவசியமான உணர்ச்சிக் கருவிகளை இயற்கையாகவே பெற்றிருக்கின்றன ; அவற்றால் நன்மையடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வாழ்க்கை.pdf/39&oldid=1123794" இலிருந்து மீள்விக்கப்பட்டது