உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாழ விரும்பியவன்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

jo இ. விக்லாசத்துக்குக் கற்பனை கொஞ்சம் அதி கதாசிரியன் ஆக முயன்று கொண்டிருந்தான். சில கதைகள் எழுதியிருந்தான். - தான் எழுதியவற்றை ஒவ்வொரு பத்திரிகைக்கும் அனுப்பி வைப்பது அவனது தொழில். ஒரு பத்திரிகைக்குப் போய் ஒரு கதை அங்கிருந்து திரும்பி வந்ததும், அதை வேருெரு பத்திரி கைக்கு அனுப்ப வேண்டியது. இப்படி ஒரே கதை எல்லாப் பத்திரிகைகளுக்கும் போய் வந்துவிடும். இதில் கைலாசத் துக்குத் திருப்தி-அவன் எழுதுகிற ஒவ்வொன்றையும் எல்லாப் பத்திரிகைகளின் உதவி ஆசிரியர்களும் படித்துவிடுகிருச்கள் எனறு , - அவன் பெரிதாக ஒரு நாவல் எழுதத் திட்டம் தீட்டி வந் தான். சதா அதே நிதனப்புத்தான் அவனுக்கு. இதில் வருகிற நாயகன் எப்படி இருக்க வேண்டும்; நாயகி எவ்வாறு இருப்பாள், நடந்து கொள்வாள் என்று கற்பனை செய்வதில் அவனுக்கு விசேஷ சுவாரஸ்யம். தெருக்களில் திரிகிறபோதும், பஸ்ஸாக்காகக் காத்து நிற்கிறபோதும்-எங்கும், எப்போதுமே, பார்வையில் படுகிற நவயுவதிகளைக் கூர்ந்து கவனிப்பது அவன் இயல்பாயிற்று. அழகான பெண்களை மட்டுமல்லாது, அலங்காரமாகவும், நாகரிகமாகவும் ஸ்டைலாகவும் டிரஸ் செய்து கொண்டு சஞ்சரிக்கிற சகல பெண்களையும் பார்ப்பது இதம்தரும் காரியம் என்பது அவன் எண்ணம். அதில் ஒரு இன்பம் இருக்கிறது. அதளுல்தான் பெண்களைப் பார்க்க விரும்புகிறேன் என்று அவன் சொல்லமாட்டான். என் நாவலில் வருகிற பாத்திரங்களை உருவாக்குவதற்காகவே நான் சகலவிதமான பெண்களையும் ஸ்ட் டி பண்ணிக்கொண்டிருக்கிறேன் என்றுதான் சொல்வான். 2 17