உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

13


விட்டார்கள். ராணி நேருவின் பெற்றோரும் பாட்டன் மாரும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தான் காஷ்மீரிலிருந்து வந்திருந்தனர். ஆகவே காஷ்மீரிகளின் பண்பும் நலனும் வனப்பும் ராணி நேருவிடம் நிறைந்து விளங்கின.

அவள் பெற்றெடுத்த திருமகள் அழகு விக்கிரகம் போல் இருந்தது அதிசயம் அல்லவே!

நேரு குடும்பத்தினரின் குழந்தைகள் சில தந்தப் பதுமைகள் போல் விளங்கியது உண்டு. மோதிலால் நேரு பிறந்திராத காலத்திலேயே, அவர் குடும்பத்துச் சிறுமிகளைப் பார்த்து வெள்ளைக்காரக் குழந்தைகளோ, என்று வியந்தனர் பலர்.

1857-ம் ஆண்டில் முதல் இந்தியப் புரட்சி நிகழ்ந்த காலத்தில், நேருவின் முன்னோர் டில்லி நகரை விட்டு வெளியேற வேண்டியது அவசியமாயிற்று. அப்போது மோதிலால் பிறந்திருக்கவில்லே. அவருடைய சகோதரர்கள் ஆங்கிலம் கற்றவர்கள். மோதிலாலின் இரண்டாவது அண்ணா, நேரு குடும்பத்தினர் சிலரோடு, டில்லியிலிருந்து வெளியேறிச் சென்றபோது ஒரு சம்பவம் நிகழ்ந்தது. அவருடைய தங்கையும் அக்கூட்டத்தில் இருந்தாள். எதிரே இங்கிலீஷ் பட்டாளத்து வீரர்கள் சிலர் அச்சிறுமியைக் கண்டதும் சந்தேகம் கொண்டனர். வெள்ளைக்காரப் பெண்ணேத் திருடிச் செல்கிறார்கள் என்று நம்பி அவர்களை வளைத்து மிரட்டினார்கள். நேரு சகோதரரின் ஆங்கில அறிவு அவரைக் காப்பாற்றியது. குற்றம் சாட்டவேண்டியது, விசாரணை என்று