உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

15



வெகுகாலம் கழித்துப் பிறந்த பெண் சொரூபா. ஆகையினால் அளவுக்கு அதிகமான செல்லம் கொடுத்து அவளை வளர்த்து விட்டனர்.

மோதிலால் ஏகப்பட்ட குதிரைகளையும் காய்களையும் போஷித்து வளர்த்தார். பல கார்களும் வண்டிகளும் அவரிடமிருந்தன. குதிரை ஏற்றம், வேட்டை ஆடுதல் முதலியவற்றில் அவருக்கு அதிகப் பிரியம் உண்டு. தனது குழந்தைகளும் தன்னைப் போல் சகல கலைகளிலும் பயிற்சி பெறவேண்டும் என்று ஆசைப்பட்டார் அவர். அதனால் ஜவஹர்லாலுக்குத் தனியாக ஒரு குதிரை அளித்திருந்தது போலவே, சொரூபாவுக்கும் சிறு குதிரை ஒன்று கொடுத்திருந்தார்.

ஜவஹர்லால் கல்வி கற்பதற்காக இங்கிலாந்து செல்ல வேண்டும் என்று ஏற்பாடாயிற்று. அவரை ஹாரோ சர்வகலா சாலையில் சேர்ப்பதற்காக, 1905-ம் ஆண்டு மே மாதம் மோதிலால் நேரு, தன் மனைவியுடனும் குழந்தை சொரூபாவோடும் இங்கிலாந்து சென்றார். அப்போது விஜயலக்ஷ்மிக்கு ஐந்து வயதுதான்.

தன் மகளைக் கவனித்து வளர்த்து, தக்க பயிற்சி அளிப்பதற்கு ஒரு ஆசிரியை தேவை என்ற எண்ணம் மோதிலாலுக்கு நெடுநாட்களாகவே இருந்து வந்தது. அவர் இங்கிலாந்து சேர்ந்ததும் மிஸ் ஹூப்பர் எனும் பெண்மணியை ஆசிரியையாக அமர்த்திக் கொண்டார்.

இங்கிலாந்திலிருந்து ஐரோப்பிய யாத்திரையை மேற்கொண்டார் மோதிலால். தனது ஐந்தாவது வயதி-