உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வாழ்க்கை வரலாறு

17



கையாகப் பிறந்ததில் அவள் மகிழ்ச்சி அடைந்தாள். ஆயினும், அன்னையின் நிலைமை அவளுக்குத் துயரம் அளிக்காமல் இல்லை.

ராணி நேருவின் உடல்நிலை தேறுவதற்கு நீண்ட நாட்கள் பிடித்தன. அதற்குப் பிறகும் நெடுங்காலம் வரை அவள் நோயாளி அந்தஸ்துடன்தான் வாழ்ந்து வந்தாள். அவள் உடல் பரிபூரணமான சுகங்கில எய்த வில்லை.

கிருஷ்ணாவுக்கு மூன்று வயதானதுமே அக்காளின் ஆசிரியையான மிஸ் ஹூப்பர் தங்கையையும் கவனித் துப் பயிற்றுவிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்டாள். கிருஷ்ணாவிடம் நேரு குடும்பத்தினரின் பிறவிக்குணங்களாகிய பிடிவாதம், முன்கோபம், அடங்காத்தனம் முதலியன தொட்டிற் பண்புகளாகப் படிந்து போயிருந்தன. ஆகவே அவள் ஆசிரியைக்கு அதிகத் தொல்லை கொடுத்து வந்தாள்.

மோதிலால் நேரு கிருஷ்ணாவுக்கும் ஒரு குதிரை வாங்கிக் கொடுத்திருந்தார். பனிவெண்நிற ஆகுப்புரவி அது. அதை அவள் அன்புடன் நடத்தி வந்தாள். ஆனால் ஒருநாள் அக்குதிரையைப் பாம்பு கடித்துவிட் டது. குதிரை இறந்து போனதும் குமாரி மிகவும் துயருற்று வருந்தினாள்.

விஜயலக்ஷ்மியின் சிறு பருவ நாட்கள் இனியன வாய், மனோகரமானவையாக, கோலாகலமும் செல்வச் சிறப்பும் விழா விமரிசைகளும் நிறைந்தனவாகக் கழிந்தன. ரக்ஷாபந்தன், நவ்ரோஸ் பண்டிகை, தீபாவளி,