உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விஜயலஷ்மி பண்டிட்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



வாழ்க்கை வரலாறு

37



ஜவஹர்லாலின் உறுதியான தேசப்பற்றும், பொதுநல

லட்சியமும், ஊக்கமான உழைப்பும் தந்தை நேருவின் விடாப்பிடியான கொள்கைகளையும் தளரவைத்து விட்டன.மகனிடம் கொண்ட அளவில்லா அன்பு தான் இதற்கு முக்கிய காரணமாகும்.

தந்தையும் மகனும் தீவிர அரசியல் தலைவர்களாக மாறினர்கள். சுதந்திரப் போரில் தண்ணிகரில்லாத தனிப்பெரும் பணி ஆற்றினார்கள்.அந்த அந்த காலத்துக்கு ஏற்ப காந்திஜி காட்டிய வழிகளையும் வகுத்த திட்டங்களையும் வெற்றிகரமாக செயல்படுத்துவதில் முன்னின்றனர்.அடிக்கடி சிறையில் அடைப்பட்டு வாடினார்கள்.

இவற்றால் எல்லாம் ஆனந்த பவனம் தனது ராஜரீகத்தைப் பறிகொடுக்க நேர்ந்தது. மோதிலால்' நேரு வக்கில் தொழிலத் துறந்துவிட்ட உடனேயே குடும்பம் பலபல மாறுதல்களை அனுபவிக்க வேண்டிய தாயிற்று.

மோதலால் நேரு லடசம்லட்சமாகச் சம்பாதித்தார். பணத்தைச் சேமித்து வைக்கவேண்டும் என்ற எண்ணம் அவரிடம் இருந்ததில்லை. தாராளமாக அள்ளி விசி ஆடம்பரமாக வாழ்க்கை கடத்தினர். வருமானம் நின்று போனதும், செலவுகளைக் குறைக்க வேண்டியது அவசியமாயிற்று.

ஆகவே முதல் காரியமாக அவர் தன்னிடமிருந்த குதிரைகளையும் வண்டிகளையும் விற்றுவிட்டார். இதைச்செய்வது அவரது மனதுக்குப் பிடித்த காரியமல்ல.

3