வாழ்க்கை வரலாறு
37
வேறு சிலரையும் சேர்த்துக்கொண்டு அவன் அந்த நாகத்தை வேட்டையாடிக் கொன்று திர்க்கும் வரை அவனா இருக்கவில்லை.
இவ்விஷயத்தை அறிந்ததும் பழைய வேலைக்காரர்கள் பதறினார்கள். குடும்பத் தலைவி ராணி நேரு உள்ளக் கலக்கம் எய்தினாள். என்ன பிரயோசனம் ? நடந்தது நடந்து விட்டது. இனித் தவிர்க்க முடியுமா? வருவது வந்துதானே தீரும் என்று அமைதிபெற முயன்றார்கள்.
விரைவிலேயே பவனம் முன் கண்டிராத பெரும் . மாற்றங்களே அனுபவிக்க நேர்ந்தது. மனப் பாம்பின் பெருமையைப் பேசத் தவறுவார்களா விஷயம் அறிந்தவர்கள்.
மோதிலால்நேரு எதைப்பற்றியும் கவலை கொள்ளவில்லை, தமது வாழ்க்கை ஏட்டிலே புதுக் கணக்கைத் தீட்ட துணிந்தார் அவர். அறுபதாவது வயதிலே முற்றிலும் புதுரகமான வாழ்க்கையைத் தேர்ந்து கொண்ட அவரது துணிவும் மன உறுதியும் நேரு குடும்த்தினர் அனைவருக்கும் அதிசயிக்கத் தக்க விஷயமாகவும் போற்றத் தகுந்த பண்பாகவுமே விளங்கின.
மோதிலால் நேரு வக்கீல் தொழிலைத் துறந்த பிறகும், கையிலிருந்த சில வழக்குகளை முடித்துக் கொடுப்பதற்காக நீதிமன்றம் சென்று வந்தார். அவரு டைய பழைய கட்சிக்காரர்கள் தங்களின் புதிய வழக்கு களையும் அவரே ஏற்று நடத்த வேண்டும் என்று கெஞ்சிக் கேட்பது வழக்கமாகிவிட்டது. யார் எவ்வளவு