2. to விஞ்ஞானச் சிக்கல்கள்
கயிறுகள் மூலமாகச் செங்கோணத்தை அமைத்துக் கணக்கிடும் எகிப்தியர் கணக்கியல் முறையை கிரேக்க நாட்டுக் கணித மேதையான தேவிஸ் என்பவர் கேள்விப்பட்டு வியப்படைந்தார்.
கயிற்றாலமைந்த முறைகள் எப்படி ஒரே ஒழுங்காக அமைகின்றன? என்று ஆச்சரியப்பட்டு அந்த முறைகளை அவர் ஆராயத் தொடங்கினார். 'ஜியோமதி, என்ற இந்த எகிப்தியர் கணக்குகள், இன்று விஞ்ஞான உருவம் பெற்று உலகத்தால் பாராட்டி வரவேற்கும் அளவு உயர்ந்து விட்டது என்றால், தேவிஸ் என்ற அந்த கணிதமேதை வினவிய வினாவே முதற் காரணமாகும்.
வியப்பான இந்த கேள்வியால் உருவான ஆராய்ச்சியை அவர் தீவிரமாகச் செயல்படுத்தினார். "ஏற்கனவே தெளிவாகத் தெரிந்த தத்துவங்களில் இருந்தே, மற்றவைகளை ஊகித்து அறிவதும், அந்த தத்துவங்கள் எதுவரை வழி காட்டிச் செல்கின்றனவோ, அதுவரைப் பின் பற்றிச் செல்வதுமே சரி” என்ற விடையே, தேவிஸ் எழுப்பிய வினாவுக்குரிய பதிலாக அமைந்தது.
கிரேக்கக் கணித மேதை தேவிஸ், எகிப்திய ஜியோமெட்டிரிக் கணக்குக்குப் புதிய ஒர் உருவத்தை அவரது ஆய்வு மூலம்ாகக் கண்டுபிடித்து உதவினார். அந்த கணக்கியல் மாமேதை வெளியிட்ட இந்த ஆராய்ச்சிக் கருத்து, பொதுவாக, எல்லாத் தத்துவ முறைகளுக்கும் பொருந்துவதாகத் தோன்றின.
ஆனாலும், குறிப்பாக "ஜியோமிதி' கணக்கை அடிப்படையாகக் கொண்ட இந்தக் கருத்தை முதன்