பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 的21 இந்த பழைய கணக்கீடு முறை விதிகளினால் ஒருவருக்கு அதிக நிலமும், மற்றவருக்குக் குறைந்த அளவு நிலமும் கிடைத்து விடும்.

அதனால், பலர் - அந்த நாட்டின் அரசுக்கு அதிக வரிகள் கட்டவேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டு விடுகின்றது.

மக்களுக்கும், அரசுக்கும் இந்தக் கணக்கீட்டு தவறுகளினால், அடிக்கடி பிணக்குகளும் - வழக்கு களும் ஏற்படுவது உண்டு.

எகிப்தியர்கள், செங்கோணத்தை அமைப்பதற்குக் கையாண்ட முறை ஒரு வியப்பான கோட்பாடாகும். ஒரு பக்கம் மூன்றலகு, மறு பக்கம் நான்கலகு, வேறு பக்கம் ஐந்தலகு என்ற பக்கங்களையும், கயிற்றில் அமைக்கப்பட்ட முக்கோணங்களையும் அவர்கள் பயன்படுத்தி வந்தார்கள்.

அளக்கும் கயிற்றில், அளந்த அலகுக்கு ஏற்ற இடத்தில் முடிச்சுகளைப் போடுவார்கள்.

மூன்று பக்கத்தின் மூலைகளிலும் மேற்கண்டவாறு மூன்று முடிச்சுகள் இருக்கும்.

முடிச்சுகள் போடப்பட்ட கயிற்றை இழுத்து நீட்டிப் பிடிப்பார்கள்.

அந்தக் கயிற்றின் மூன்றலகு நீளமுள்ள பக்கத்துக்கும்- நான்கலகு நீளமுள்ள பக்கத்துக்கும்இடையில் உருவாகும் கோணமே செங்கோணமாக இருக்கும்.

எகிப்து மக்கள், இந்த செங்கோண அளவையை அளந்து கணக்கிடும் அதிகாரிகளுக்குக் 'கயிறு நீட்டிகள்” என்று பெயரிட்டு அழைப்பார்கள்.