பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2燈體 விஞ்ஞானச் சிக்கல்கள்

"ஜியோமெட்டிரி' என்றால், நிலத்தை அளத்தல் என்று பொருளாகும். இந்த சொல், கிரேக்க மொழிச் சொல்லாகும்.

நிலத்தை அளக்கும் இந்த கணக்கை, எகிப்தியர்கள் முதன் முதலாக எப்படிக் கையாண்டார்கள்? இது ஒரு விசித்திரமான முறையாகும்.

நைல் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிவரும் வெள்ளம் கொண்டு வரும் கறுப்பு மணல், எகிப்து மக்களின் நிலங்களின் மேல் பரப்பிவிட்டு, அவரவர் நிலத்தின் எல்லைகளை மேடு பள்ளங்களாக்கி விட்டுச் சென்றுவிடும்!

ஒழுங்கான வடிவிலே அந்த நிலங்களின் உரிமையாளர்கள், அவற்றைப் பல கோணங்களாகப் பிரித்துக் கொள்வார்கள்.

அவ்வாறு பிரிக்கப்பட்ட தனித்தனி முக்கோண அளவுகளைப் பிறகு ஒன்றாகக் கூட்டி, மொத்தப் பரப்பளவைக் கணக்கிட்டுக் கொள்வார்கள்.

வெள்ளம் வருவதற்கு முன்பு அவரவர்களுக்கு எவ்வளவு நிலங்கள் இருந்தன என்பதற்குரிய கணக்குடன், புதிதாகப் பிரிக்கப்பட்ட மொத்த பரப்பு களின் கணக்கோடு ஒப்பு நோக்கிப் பார்த்து, ஏற்கனவே இருந்த நிலங்களுக்குச் சரியாக - ஈடாகப் பங்கீடு செய்து கொள்வார்கள்.

எகிப்து மக்கள், முக்கோணங்களின் எல்லைகளை கண்டு பிடிப்பதற்கு, அவர்களது முன்னோர்கள் கையாண்டு வந்த கணக்கீடு விதிகளையே பயன் படுத்தி வந்தார்கள்.