பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி ■ 證 ஒருவனிடமிருந்து நிலத் தீர்வையை ஒழுங்காக வசூல் செய்ய வேண்டுமென்றால், அவனுடைய சொத்து எது? எவ்வளவு? என்று திட்டவட்டமாகத் தெரிய வேண்டாமா?

அப்போதல்லவா, அரசும் ஒழுங்கான கணக்கோடு மக்களிடம் வசூலுக்கு வர முடியும்?

அந்த கணக்குக்கு ஏற்றபடி அல்லவா, மக்களால் வரியையும் ஒழுங்காகக் கட்ட முடியும்? என்று எகிப்து அரசு சிந்தித்தது.

ஒவ்வோர் ஆண்டும் நைல் நதி இழைத்து வரும் தீராக் கொடுமைகளிலிருந்து, எகிப்து மக்கள் அவரவர் நிலங்களைச் சரியான கணக்குப்படி வைத்துக் கொள்ளப் பெரிதும் முயன்றனர்.

ஆனால், ஒவ்வொரு வெள்ளப் பெருக்கிற்குப் பிறகும், அவரவர் நிலங்களை மீண்டும் - மீண்டும் அளந்து கணக்கெடுப்பதே அவர்களுக்கு ஒரு வேலையாய் அமைந்து விடுகின்றதே! என்ன செய் வார்கள்? அதனால் வெறுப்பும் - வேதனையும் ஏற்படாதா? அதனாலே, அவர்களும் இதற்கோர் முடிவு கண்டாக வேண்டுமென்று சிந்தித்தபடியே இருந்தனர்.

நிலங்களை அளந்து கணக்கெடுக்கும் இந்தச் சிக்கலை ஒழுங்குபடுத்த, எகிப்து அரசினரும் - மக் களும் ஆண்டாண்டாகச் சிந்தித்தும், இந்தச் சிக்கல் தீர்ந்த பாடில்லையே!

இந்தச் சிக்கலை அவிழ்ப்பதற்காகக் கண்டு பிடிக்கப்பட்ட கணக்குதான்், ஜியோமெட்டிரி என்ற கணக்காகும்.