பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

懿芭 விஞ்ஞானச் சிக்கல்கள்

நைல் நதியின் கோரக் கொடுமைகளால் மக்கள் மட்டும் நஷ்டமடையவில்லை. அந்த நாட்டு அரசுக்கும் ஒழுங்கான முறையில், அந்தந்த நேரங் களில் வரிகளும் வசூலாவதில்லை.

வரியை வசூல் செய்ய மக்களிடம் அதிகாரிகள் வருவார்கள்,

அவர்களிடம், 'எது எனது நிலம், நிலத்தைக் காட்டு, அளந்து கொடு” என்று மக்கள் கேட்பார்கள். வந்த அதிகாரிகள், வாயை மூடிக் கொண்டு வந்த வழியே சென்று மக்கள் கேட்ட வினாக்களை அரசிடம் கூறுவார்கள்.

இதனால், எகிப்து அரசு, போதிய வருவாயற்று திணறும் நிலை உருவானது. மக்கள் மனக் குறைகளை, வாழ்க்கைக்குரிய கடமைகளை செய்து தர முடியாமல் தவித்தது.

ஆற்றிலே ஏற்பட்ட வெள்ளத்தாலே அழிந்து போன அவரவர் நிலங்களின் எல்லைகளை அளப் பது என்றால் - எப்படி அளப்பது? எதைக் கொண்டு அளப்பது?

எகிப்தியர்களின் பழைய கணக்கு வழக்குகளுக்கேற்ப மீண்டும் அளந்தாலும், எப்படியோ தவறுகள் மறுபடியும் ஏற்பட்டுத்தான்் வந்தன.

ஒருவாறு, அவரவர் நிலங்களை அளந்து கொடுத்ததற்குப் பிறகும் கூட, மக்கள் அந்தக் கணக்குகள் மீதும் அவநம்பிக்கைக் கொண்டு, குற்றங் குறைகளைக் கூறித்தான்் வந்தனர். இவ்வாறு நடை பெறாமலிருக்க வழி என்ன?