பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி ü鳍7 மட்டுமல்ல, அந்தந்த வயல்கள் யார் யாருக்குச் சொந்தமென்பதே கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டு விடும்.

வயல்களுக்காகப் போடப்பட்ட எல்லைக் குறிகள், எல்லைக் கோடுகள் எல்லாம் வெள்ளத்தோடு வெள்ளமாய் பெயர்ந்தோடிப் போகும்.

வெள்ளம் வற்றியவுடன், அவரவர் நிலங்களை அடையாளம் காண முடியாமையால், ஒற்றுமையாக வாழ்ந்த ஆற்றுப் படுகை மக்களிடையே அடிதடிகள் ஏற்படும் கொலை, கொள்ளைகள் கோரமாய்த் தோன்றும் ஒருவருக்கொருவர் ஒன்றுபட முடியா விரோதிகளாவார்கள்!

ஒரு நாளல்ல, இரு நாட்களல்ல இந்த அடிதடிப் போராட்டக் கலவரங்கள்! நாள்தோறும் அவர் களிடையே தோன்றி, வாழ்க்கையே அவர்களுக்கு வெறுத்துப் போகும் நிலை ஏற்படும்.

எவ்வளவுக்கு எவ்வளவு நைல் ஆறு இயற்கைச் செல்வங்களை வெள்ளத்தில் கொண்டு வருமோ, அவ்வளவுக்கு அவ்வளவு மற்ற இயற்கைச் செல்வங் களையும் அழித்து அலங்கோலமாக்கி விடும்.

ஆண்டாண்டு தோறும் அந்த ஆறு, தனது வெள்ளப் போக்கை மாற்றி மாற்றி, படுகையையும் மாற்றி மாற்றி அமைத்துக் கொள்வதால், பயிர்த் தொழில்கள் எல்லாம் மாறி மாறி அமைந்து வந்தன!

ஒருவனுடைய நிலபுலங்களின் மதிப்பு எவ்வளவு என்று தெரிந்தால்தான்ே, மக்களிடம் அவற்றிற்குரிய தீர்வைகளை அரசு வசூல் செய்ய முடியும்?