பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蓋翡 விஞ்ஞானச் சிக்கல்கள்

எகிப்திய மக்களுக்கு சிறப்புமிக்க நாகரிகத்தையும், பெருமை தரும் வாழ்க்கையினையும் கொடையாகத் தந்துதவிய நைல் நதி, அந்த மக்களை ஆண்ட்ாண்டு தோறும் அழவைக்கவும், ஆறாத் துயரத்திற்கு ஆட்படுத்தவும் தயங்கவில்லை.

ஒவ்வோர் ஆண்டும், நைல் நதியில் மழைக் காலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து சீறி கரை புரண்டு ஓடி வரும்.

ஆற்றின் இரு கரைகளையும் உடைத்துக் கொண்டு, ஒங்காரமிட்டுத் திரண்டு, புரண்டு, உருண் டோடி வரும் தண்ணிர்க் கொந்தளிப்பு, எகிப்திய மக்களின் வாழ்க்கையையே சின்னாபின்னப் படுத்திச் சீரழித்துவிடும்.

அந்த ஆறு ஒடி வரும் வெள்ள வேகத்தால், அதன் பகுதிகளிலே உள்ள, பெரிய பெரிய மலைகளிலே இருக்கும் வளமிகுந்த கரிய மண்ணை வாரி எடுத்துக் கொண்டு வந்து, படுகைப் பக்கங்களிலே உள்ள விவசாய நிலங்களில் எல்லாம் மணலைப் பரப்பி விடும்.

அதனால், ஆற்றுப் படுகைகளிலே செழித்து வளர்ந்துள்ள விவசாயப் பயிர்கள் எல்லாம் பாழாய் அழிந்துவிடும்.

ஆற்றுப் பள்ளங்கள் மேடுகளாகும் மேடுகள் பள்ளங்களாகும்.

மண் அரிப்புகள் ஏற்பட்டு, பயிர் விளையும் வயல்கள் எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்தே போகும்.

வயல்களிலே உள்ள பயிர்கள் நாசமாவது