பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலவர் என்.வி. கலைமணி 謝 鷲

வரலாற்றை நாம் பார்க்கும் போது, அது ஒரு சிறந்த, நாகரிக வரலாறாகவே தோன்றுகின்றது.

நைல் நதி பாயும் எகிப்து நாட்டை அது பொன் விளையும் பூமியாகவே மாற்றியுள்ளது.

அதனால்தான்், எகிப்து ஆற்றுச் சமவெளியை 'நைல் நதியின் நன்கொடை என்று உலக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

எகிப்து மக்கள் கிறிஸ்து பிறப்பதற்கு நான்காயிரம் ஆண்டுகட்கு முன்பே நகர வாழ்க்கையை மேற்கொண்டு சிறப்பாக வாழ்ந்துள்ளார்கள்.

திப்ஸ், மெம்பிஸ் என்ற நகரங்கள் எகிப்தியரின் தலை சிறந்த நகரங்களாகத் திகழ்ந்திருக்கின்றன.

நைல் நதிச் சமவெளியிலே வாழ்ந்த மக்கள், வேளாண்மைத் தொழிலையே முக்கியமான தொழிலாகச் செய்து வந்தார்கள்.

விவசாயம் செய்வதற்குரிய வளமான நிலம் வேண்டுமல்லவா? அதனால், நைல் ஆற்றுச் சமவெளி நிலங்களையே கூறு போட்டுப் பிரித்துக் கொண்டு விவசாயம் செய்தார்கள் எகிப்து மக்கள்.

நைல் நதியில் அவ்வப்போது பொங்கிவரும் வெள்ளப் பெருக்கைக்கூட, அந்த நாட்டு மக்கள் தங்களால் இயன்ற அளவு கட்டுப்படுத்தி, நீர்ப்பாசன வசதிகளைப் பெருமளவிற்குச் செய்து கொண்டனர்.

நெசவுத் தொழில், சுரங்கத் தொழில், மண் பாண்டத் தொழில், கண்ணாடித் தொழில், வாணிகம் போன்ற தொழில்களில் எகிப்தியர் சிறந்து விளங்கினார்கள்.