பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

芷 விஞ்ஞானச் சிக்கல்கள்

ஒரு நாட்டின் நாகரிகத்தை நாம் அறிய வேண்டு மானால், அந்த நாட்டின் ஆதி வரலாறு முழுமையாக நமக்குக் கிடைக்க வேண்டும்.

ஒரு நாட்டு வரலாறு என்றால், அது எழுதப்பட்ட வரலாறு, எழுதப்படா வரலாறு என்ற இரு வகை களாக இருக்கும்.

எழுதப்பட்ட வரலாறு என்றால், அதில் கூட மெய் வரலாறு, பொய் வரலாறு என்று இரு விதமாகக்

காணப்படும்.

எழுதப்படா வரலாறு என்றால், அது அறியப்பட்ட வரலாறு, அறியப்படா வரலாறு, என இரு திறமாக அமையும்.

காணப்படும் வரலாற்றுக்குரிய போதிய குறிப்பு களும் - கருவிகளும் - சான்றுகளும் - ஒழுங்காக, வரைமுறைகளாக, தெளிவாக இருந்தால்தான்் அந்த வரலாறு அறியப்படும்.

அவ்வாறற்ற வரலாறு, வரலாறே ஆகா! அதனால், நாட்டுக்கு எவ்வித நன்மையும் ஏற்படா.

ஒரு நாட்டின் வரலாற்றை எழுத முன் வருபவருக்கு முதலில் இதயம் சுத்தமாக இருக்க வேண்டும்.

எழுதப்படும் நாட்டின் மேல் பற்றும், நடு நிலைச் சிந்தனையும், மாசு படா இன உணர்வும் இருந்தால் தான்் - அந்த நாடு உண்மையான வரலாற்றைப் பெற முடியும்.

இந்த நோக்கத்தோடு, கிறித்து பிறப்பதற்கு நான்காயிரம் ஆண்டுகட்கு முன்புள்ள நைல் நதி