பக்கம்:விஞ்ஞானச் சிக்கல்கள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

亡熊3

1.நைல் நதி சிக்கல்

ஆற்றுச் சமவெளிகள், உலகத்தின் மிகத் தொன்மையான நாகரிகங்களைத் தோற்றுவித் திருக்கின்றன.

நீர்வளம், நிலவளமிக்க ஆற்றுச் சமவெளிகளில் மக்கள் சிறிதளவே உழைத்து, உணவுப் பொருட் களை விளைவித்து வந்ததே அதற்குரிய முக்கிய காரணமாகும்.

ஒய்வு நேரம் கிடைத்த போதெல்லாம், அவர்கள் தங்களது அறிவையும், சிந்தனையையும் பயன் படுததினார்கள்.

நாகரிக வாழ்க்கையினை உருவாக்குவதற்குரிய டவடிக்கைகளை மேற்கொண்டு அயராது உழைத்தார்கள்.

அந்த மனித இனம், கடுமையாக உழைத்தது. அதனால், பழமையான உலக நாகரிகங்கள் தோன் றின!

பஃறுளி ஆறு பாய்ந்த பண்டைய கடல் கொண்ட தமிழகம் - ஆப்பிரிக்காவில் நைல் நதி பாயும் எகிப்து - யூப்ரடீஸ், டைக்ரீஸ் ஆறுகள் ஒடும் மெசபடோமியா, சிந்து, கங்கை, காவிரி நதிகள் பாயும் இந்தியா - ஒயாங்கோ ஆறு பாயும் சீனா, தேம்ஸ் நதி பாயும் இங்கிலாந்து அமேசான் ஆறு ஒடும் வட அமெரிக்கா ஆகிய ஆற்றுச் சமவெளி இடங்கள், உலகம் பாராட்டி மகிழ்வதற்குரிய நாகரிகங்கள் பிறந்த இடங்களாக உள்ளன.