10
'அல்லல் நீத்த உவகை' என்னும் மகிழ்வு நிலைக்கு, நிலைக்களன்களாக அமைபவை நான்கு என்றும், அவை செல்வம், புலன், புணர்வு, விளையாட்டு என்றும் தொல்காப்பியர் கூறிச் சென்றிருக்கிறார்.
துன்பம் கலவாத இன்பம் நல்கும் இனிய காரியங்களுள் நமது விளையாட்டும் ஒன்றாக இருப்பதால், விளையாட்டு என்று பெயர் பெற்ற முறை எத்தனை அளவு போற்றற்குரியது என்று நாம் அறிந்து பேரின்பம் எய்துகிறோம்.
இதே கருத்தின் அடிப்படையில் தான், வேற்று மொழியில் நிலவி வரும் சொற்களும் அமைந்திருக்கின்றன.
இந்தோ ஐரோப்பிய மொழியில் 'Ghem' என்ற சொல்லுக்கு, 'மகிழ்ச்சியுடன் தாண்டு, குதி' என்று பொருள் கூறுகின்றனர். இதனையே ஜெர்மானிய மொழியில் 'Gaman' என்றும், ஹெலனிக் மொழிச் சொல்லாக 'kambe' என்றும், இத்தாலிய மொழியில் 'Campa’ என்றும், பழைய பிரெஞ்சு மொழியில் 'Jampe' என்றும், பழைய நார்சிய மொழியில் ‘Gems' என்றும் வழங்கப் பட்டிருப்பதையும் காணலாம்.
விளையாட்டினை விளையாடு என்று சொல்வது அதாவது Play என்றும் கூறுவது நமக்கும் தெரியும். Play என்ற ஆங்கிலச் சொல் போலவே, ஆங்கிலோ