உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுக்களுக்கு பெயர் வந்தது எப்படி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



19

 சொல்லுக்கு மாறி மாறி அடித்தல் என்பது பொருளாகும். அந்த அடிப்படையிலே சூட்டப் பட்ட பெயர், இன்று உலகெங்கினும் பரவி, ஆட்டத்தின் பெருமையை விளக்கி நிற்கிறது.

5. கிரிக்கெட்


பல கோடிக் கணக்கான ரசிகர்களைப் பல நாட்கள் தொடர்ந்து நேரில் பார்த்தும் வானெவி யில் கேட்டும், மகிழ்கின்ற வகையில் மயக்கி வைத் திருக்கின்ற கிரிக்கெட் ஆட்டத்தின் பெயரமைப் புக்கும், தோற்றத்திற்கும் காரணத்தை ஆராயப் புகுவோமானல், நமக்கு மயக்கமும் சற்றுக் குழப் பமும் ஏற்படத்தான் செய்கிறது.

சரித்திர ஆசிரியர்களின் ஆராய்ச்சிக் குறிப்புக் கள் மாறுபட்டும், சில நேரத்தில் வேறுபட்டும் நம்மைக் கூறுபோடும்போது, அப்படித்தான் ஏற் படும். என்ருலும், நாம் அதைத் தொடர்ந்து காண்போம்.

கிரிக்கெட் என்ற பெயர் 'கிராகட்’ (Croquet) என்ற சொல்லிலிருந்து தான் வந்திருக்கவேண்டும் என்று சில சரித்திர ஆசிரியர்கள் நினைக்கின்றனர்.