உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டுத்துறையில் கலைச்சொல் அகராதி.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
47


பந்தாட்ட ஆடுகளம், பொதுவாக 26 மீட்டர் நீளமும் 14 மீட்டர் அகலமும் கொண்ட ஒரு நீண்ட சதுர வடிவமுள்ள பகுதியாகும்.

புல்தரை ஆடுகளம் ஆடுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது. உள்ளாடும் அரங்கத்தில் ஆடுகளம் அமைந்தால், அந்த அரங்கத்தின் மேற் கூரையின் அளவு குறைந்தது 7 மீட்டர் உயரமாவது இருக்க வேண்டும்.

48.நடுவர் (Referee)

கூடைப் பந்தாட்டத்திற்கு இரண்டு நடுவர்கள் உண்டு. விதிகளுக்குட்பட்டு, அவர்கள் ஆட்டத்தை சிறப்பாகக் கட்டுப்படுத்தி நடத்தி முடிப்பார்கள்.

ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு, எந்த ஆடுகளப் பகுதியில் தாங்கள் இருந்து செயல்பட வேண்டும் என்று பகுத்துக் கொண்டு கண்காணிப்பார்கள்.

எந்த நடுவரும் அவரவருக்கான பகுதியில் தான் கண்காணிக்க வேண்டும். மற்றவர் பகுதியில் எடுக்கின்ற முடிவு பற்றி கேள்விகள் எழுப்பவோ, அல்லது அதனை மாற்றி அமைக்கவோ யாருக்கும் அதிகாரமில்லை.

இரண்டு நடுவர்களும் ஒரே சமயத்தில் சேர்ந்தாற்போல் ஒரு விதிமீறலைப் பற்றி முடிவெடுக்கும் பொழுது, அந்த முடிவு பல வகையானத் தண்டனைகளைத் தருமானால், அவற்றில் கடுமையான தண்டனை எதுவோ, அதையே செயல்படுத்த வேண்டும்.

49. வெற்றி எண் குறிப்பாளர் (Scorer)

முதன் முதலில் ஆடுகளத்தில் இறங்கி விளையாடும் நிரந்தர ஆட்டக்காரர்கள். மாற்றாட்டக்காரர்கள் பெயர்களைக்