wo
22
வைத்திருப்பது நல்லது. அப்பொழுதுதான் ஒடி வருவோருக்குப் பந்தயப் பாதையின் உள் அளவு தெளிவாகத் தெரியும்.
பந்தயப் பாதையை அளந்து காரியம் ஆற்றும் போது, பயன்படுத்தும் அளவை நாடா (Tape) துணி யினால் செய்யப்பட்டிருந்தால், இழுத்து அளக்கும் போது நீளும் தன்மை ஏற்படும். அதனால் அளவில் மாற்றம் நிகழ வாய்ப்புண்டு. ஆகவே, தகட்டால் ஆள (Steel tape) அளவை நாடாவையே பயன்படுத்துதல் நல்லது.
இவ்வாறு அளந்து கட்டுகின்ற பந்தயப் பாதையின் உட்கோட்டை முன் கூறியவாறு அமைப்ப தோடு, இன்னொரு காரியமும் செய்தால் எழிலாகவும் இருக்கும். தவறு நடக்காமல் தடுக்கவும் முடியும். 18 அங்குலம் உயரக் குச்சியில் 10"X8” அளவுள்ள கொடியினை மாட்டி, பந்தயப் பாதையின் உட் கோட்டில் 10 கெச துரத்திற்கு விட்டு விட்டுக் கொடிகளை நட்டுச் செல்ல வேண்டும். அத்துடன் ஒரு கொடியையும் அதற்கு அப்பாலுள்ள இன்னொரு கொடியையும் சிறு கம்பியினாலோ அல்லது கயிற்றினாலோ தொடர்பு இருக்கும்படி சங்கிலி போலக் கட்டிவிட்டால், உள்ளே அமைந்து ஒடும் பாதையில் (Inner Lane) ஒடுவோர் வளைவுப் பகுதி களில், குறுக்கே கடந்து ஓடாதவாறு தடை செய்ய முடியும்.