உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32 [] விளையாட்டு விழா நடத்துவது எப்படி?

புறம் இருப்பது போல பொருத்திக் கொண்டால் எளிதாக இருக்கும்.

நெடுங்கம்பங்களை அடிக்கடி அப்படி இப்படி என்று துரக்கி சரி செய்யாமல், நிலையாகவும் அகல மானதாகவும் வைப்பதற்கு இம்முறை செளகரியமாக இருக்கும்.

இனி, தாண்ட உதவும் கோல் பற்றிய விதிமுறை களைக் காண்போம்.

தாண்ட உதவுகின்ற கோல் எந்தப் பொருளி னாலாவது (Material) அல்லது பொருள் கலவையி' னாலாவது செய்யப்பட்டிருக்கலாம்.(மூங்கில் அல்லது உலோகம். அல்லது கண்ணாடி இழை (Fibre Class).

நீளமும் அகலமும் அளவின்றியும் இருக்கலாம். பயன்படுத்துகின்ற வீரரது விருப்பப்படியும் அமைந் திருக்கலாம்.

ஆனால், அந்தக் கோலின் அடிப்பாகமானது உலோகத்தால் கட்டுப் போடப் பெற்றதாகவும் வழவழப்பாகவும் இருக்க வேண்டும்.

நாடாக்களினால் (Tape) கோலின் அடிப்பாகம் கட்டப்படுவதற்குத் தடை யொன்றும் இல்லை. என்றாலும், அடிப்பாகம் கட்டப்படுவது மிகமிக அவசியம்.

பெட்டிக்குள்ளே வேகமாக ஓடி வந்து கோலினை ஊன்றிச் செலுத்தி, மேலே முழு எடையையும் சேர்த்துத் தாண்ட எழும்போது, தாண்ட