உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எஸ். நவராஜ் செல்லையா 画 43


அவர்களை சரியான இடங்களில் உட்கார வைத்தால்தான், இடையிடையே எழுந்து நிற்காமலும் திடீரென்று ஓடாமலும், கூட்டம் போடாமலும் அப்படி இப்படி நடந்து நிகழ்ச்சிகள் நடக்கும் இடத்திற்கே வந்து இடையூறினை விளைவிக்காமலும் நாம் பாதுகாத்திட முடியும்.

இந்தப் பிரச்சினைக்கு முன் கூட்டியே திட்ட மிட்டு செயல்பட்டால் தான், வருவோரும் மகிழ்ச்சியாக வந்து விழாவினைக் கண்டுகளித்துச் செல்ல முடியும். விழாவும் வெற்றிகரமாக நடந்து முடியும்.

பந்தயத் திடலைச் சுற்றிலும் பார்வையாளர்கள் அமர்ந்திருந்து வேடிக்கைப் பார்க்கும் வண்ணம் அவர்களுக்கு இருக்கைகள் அமைப்பது நல்லது.

எல்லா நிகழ்ச்சிகள் நடப்பதும் 'அவர்களுக்குத் தெளிவாகத் தெரிவது போலவும், எந்தெந்த நிகழ்ச்சிகள் எங்கெங்கே எவ்வப்போது நடக்கின்றன என்பதை அறிவிக்கும் ஒலிபெருக்கியின் ‘அறிவிப்பு ஒலி அவர்களுக்குத் தெளிவாகக் கேட்கின்ற இட மாகவும் இருத்தல் மிகமிக அவசியம்.

இதுபோலவே, போட்டிகளில் பங்கேற்கின்ற உடலாளர்கள் தங்கியிருக்கின்ற இடமும், சகல வசதிகளும் நிறைந்ததாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும். -

ஏனென்றால், விளையாட்டு விழா வெற்றி பெறுவதற்கு மூலகாரணமாக இருப்பவர்களே விளையாட்டு வீரர்கள் தான் என்பதை உணர்ந்து,