உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விளையும் பயிர்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புதிய கண்ணன் வெளியீடுகள்


விஞ்ஞானம் பேசுகிறார்


ஆசிரியர்கள்:

பெ.நா.அப்புஸ்வாமி,ஜே.பி.மாணிக்கம்

நாம் தினசரி பல பொருள்களை உபயோகப் படுத்து கிறோம். பல பொருள்களின் உபயோகங்களையும் உணர்ந்திருக்கிறோம். அவை எப்படி வேலை செய்கின் றன என்பதைத் தெரிந்துகொள்வது நல்லதல்லவா? மொத்தம் 12 பொருள்களைப்பற்றி இதில் சித்திரங்களாக விவரிக்கப்பட்டுள்ளன. அதைக் கண்டுபிடித்தவர் யார் ? அதன் உபயோகம் என்ன ? இவை போன்ற விஷயங்களை எல்லாம் குழந்தைகள் தினசரி அரைமணி நேரம் செல விட்டால் போதும், 12 நாட்களில் தெரிந்துகொண்டு விடலாம். விலை மலிவு; பயன் அதிகம்.

'விலை 8 அணா

ப வ ழ வ ல் லி

கி. ரா. எழுதியது

அது ஒரு தனி உலகம். அங்கே வசிக்கும் மனிதர் கள் எல்லாரும் விசித்திரமானவர்கள். பிராணிகளும் விசித்திர இயல்பு கெண்டவை. முத்துக்களும், நவரத்தி னங்களும், பவழங்களும் விளையும் நாடு. அங்கே போய் எப்படியோ அகப்பட்டுக் கொள்கிறான் சுந்தரம், பாதி உடல் மனிதர்களைப் போலவும் பாதி உடல் மீனாகவும் இருந்த ராஜகுமாரி பவழவல்லியைச் சந்திக்கிறான். ஆமை ஒன்று அவனால் ஆகாத காரியத்துக்கெல்லாம் உதவுகிறது. பலவித சோதனைகளில் அகப்பட்டுக்கொண்டு, கடைசி யாக ராஜகுமாரியைப் பார்க்க வருகிறான். அப்போது தான்- மிகவும் சுவாரஸ்யமான கதை. அழகான படங் கள் நிறைந்தது.

விலை 12 அணா

கண்ணன் அங்கத்தினர்களுக்குக் கமிஷன் உண்டு.

க ண் ண ன் கா ரி யா ல ய ம் மயிலாப்பூர் சென்னை- 4