உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வீரர் உலகம்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 வீரர் உலகம் அவர்களுடைய குடலேயே மாலையாகச் சூட்டிவிட்டு, பிறகு பகை கேட்டு ஒடும்படி சீறி ஆடுகிருன்; அவனுடைய கையிலே வைத்திருக்கும் வேல் சுழலச் சுழலத் துடி ஒலிக்கிறது.1

இவ்வாறு ஆவினை மீட்கும்பொருட்டு கடைபெறும் போரில் சிலர் பகைவர் பலரை மாய்த்துத் தாமும் வீர சுவர்க்கம் புகுந்தார்கள். அவர்களே எண்ணிப் பானர்கள் வருந்தினர்கள். வீரர் புகதைப் பாடும் இயல்பு உடைய வர்கள் அவர்கள். இப்போது பெருவீரனுடைய மறைவு கருதிப் புலம்புகிருர்கள். செங்காப் புலவர்களுடைய புகழ் மாலேகளை அணிந்தவன் அவன்; பகைவர் படையைப் புலிபோலே சென்று தாக்கி அழித்தான்; அவன் இப் போது வீழ்ந்து விட்டான்; இது கண்டும் கும் கண்கள் விழ வில்லையே! என்று இரங்கி வருந்தினர்கள். இவ்வாறு அவர்கள் பாடுவதைக் கையறுநிலை என்று தமிழ் நூல்கள் கூறும்.

மற்றவர்கள் தாம் பெற்ற வெற்றியைப் பாராட்டிக் கள் உண்டு மகிழ்ந்தார்கள். ஒரு வீரன், மீட்டும் யாரேனும் வந்தால் எதிர்க்கலாம் என்று தான் அந்த உண்டாட்டில் ஈடுபடாமல் தனியே கின்ருன்.

தன் காட்டுப் பசுக்களை மீட்டு வந்த மறவர்களுக்கு அரசன் பலவகைப் பரிசுகளே வழங்கினன்; நிலங்களே அளித்தான். அவற்றைப் பெற்ற வீரர்கள் மன்னனைப் பாராட்டி வாழ்த்தினர்கள்; “இத்தகைய மன்னனுடைய ஆட்சியின் கீழே வாழும் சிறப்பையுடைய காங்கள் பகை வரை எறிந்து போர்க்களத்தில் எங்கள் உயிரைத் தியாகம் செய்யவும் சித்தமாக இருக்கிருேம்; அது பெறு தற்கரிய பேறு' என்று பெருமிதத்துடன் சொன்னர்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/21&oldid=647990" இலிருந்து மீள்விக்கப்பட்டது