2. நிரை மீட்கும் போர்
13
அதோ மற்றொரு வீரன் தனியாக நின்று தன்னைச் சூழ்ந்தவர் உடல்களை யெல்லாம் வெட்டிக் குவித்து விட்டான். அவனை எதிர்த்தவர்களில் பலர் வீழ்ந்தனர்; பலர் முதுகிட்டு ஓடினர். அவன் இன்னும் தன் கோபம் ஆறாமல், தனியே யார் வந்தாலும் ஒரு கை பார்க்கிறேன் என்று நின்று கொண்டிருக்கிறான்.
மற்றொரு வீரன் தன் வாளை உறையினின்றும் உருவி ஏந்திக்கொண்டு போர்க்களத்தில் பெருமிதத்தால் ஆடிக் கொண்டிருக்கிறான். அவன் தன்னை எதிர்த்தவர்களை விண்ணுலகுக்கு ஏற்றியவன். துடியை அடித்து ஒலி யெழுப்புகிறார்கள், அருகில் நின்றவர்கள். அந்த ஒலிக்கு ஏற்றபடி அந்த வீரன் தன் அடியை மாறி மாறி வைத்து வெற்றிக் களிப்புடன் ஆடுகிறான்.
பின்னும் ஒருவன் வேலைச் சுழற்றிக் கொண்டு ஆடுகிறான். வந்த காரியம் நிறைவேறியது என்னும் மகிழ்ச்சிக் கடலில் அவன் மிதக்கிறான். துடி கொட்டுகிறது; அதன் தாளத்துக்கு ஏற்றபடி அவன் கையில் வேல் சுழல்கிறது; அவன் கால்கள் சதியிட்டு நடனம் செய்கின்றன. அவன் கை வேலில் மாலையை அணிந்திருக்கிறான். ஆ! என்ன வெறி அவனுக்கு! பகைவருடைய குடலை எடுத்து அதையே மாலையாக அதற்குக் கட்டி ஆடுகிறான்!
“மாட்டிய பிள்ளை மறவர் நிறம்திறந்து
கூட்டிய எஃகம் குடர்மாலை – சூட்டியபின்
மாறு இரியச் சீறி நுடங்குவான் கைக்கொண்ட
வேல்திரிய விம்மும் துடி.”
[பகைவரை மாளும்படி செய்த இந்தக் காளை, பகை வீரர்களுடைய மார்புகளைப் பிளந்து பறித்த வேற்படைக்கு