இலண்டனில் உள்ள இந்தியா விடுதியில் ஒரே நேரத்தில் இருபது பேர்கள்தான் தங்கலாம். ஆனால், அங்கே ஒரே சமயத்தில் ஏழுபேருக்கு மேல் தங்குவது இல்லை. என்ன காரணங்கள் அதற்கு?
இந்தியப் புரட்சி இளைஞர்கள் கல்வி கற்க வந்துள்ளோம் என்ற பெயரிலே அங்கே வந்து தங்குவதால், அடிக்கடி அங்கு ரகசியப் போலீஸ் கண்காணிப்பு இருந்து கொண்டே இருந்தது. அதனால் இந்தியர்கள் அச்சப்பட்டு அங்கே தங்குவதில்லை.
இந்தியா விடுதியிலே தங்கி இருப்பவர்களுக்குப் போதிய பணியாளர்கள் இல்லை. அதனாலே அங்கே தங்கி இருப்பவர்களே எல்லா வேலைகளையும் செய்து கொண்டாக வேண்டும் என்பதால் இந்தியர்கள் அங்கே தங்காமல் வெவ்வேறு விடுதிகளுக்குப் போய் தங்கிவிடுவார்கள்.
இந்தியா விடுதியிலே சுவையான, விதவிதமான உணவு வகைகள் இல்லை. விருப்பத்துக்கேற்றபடி உணவுண்ண முடியவில்லை. இக்காரணங்களாலும் பலர் வெவ்வேறு உணவு விடுதிகளுக்குச் சென்று தங்கிவிடுகின்றார்கள்.
எனவே, யார் வசதிக் குறைவுகளைப் பற்றிக் கவலைப்படாதவர்களோ, யார் சுவையான உணவு வகைகளைப் பற்றி அக்கறைப் படாதவர்களோ, யார், வேலைகளைச் செய்திட வேலைக்காரர்கள் இல்லையே என்று வருத்தப்படாதவர்களோ, யார் லண்டன் ரகசியப் போலீஸ் கண்காணிப்புகளைப் பொருட்-