உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வ. வே. சு. ஐயர்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

வ. வே. சு. ஐயர்


காய்த்துத் தொங்கி, பார்ப்பவர்கள் மனத்தை ஈர்த்துக் கொண்டிருந்தன.

அந்த இழவு வீட்டின் கும்பலிலே கூடி அழுது கொண்டிருந்த பெண் ஒருத்தி, தன்னுடன் வந்திருந்த இன்னொரு பெண்ணுக்குப் புரியும்படியாக, பாட்டோடு பாட்டாக, "பந்தலிலே பாவக்காய், பந்தலிலே பாவக்காய்" என்று பாடிக்கொண்டே அழுதாள். மூக்கைச் சிந்தித் தரையிலே போட்ட அவளது சினேகிதி; அவளுக்குப் பதில் கூறும் ஜாடையில், 'போகையிலே பாத்துக்குவோம். போகையிலே பாத்துக்குவோம்' என்று பாடி அழுது கொண்டே இருந்தாள்.

இவர்கள் இருவரும் இப்படிப் பாடிய பாட்டைக் கேட்ட வீட்டுக்குச் சொந்தக்காரி, தானும் பாட்டோடு பாட்டாக, ‘அது விதைக்கல்லவோ விட்டிருக்கு, அது விதைக்கல்லவோ விட்டிருக்கு’ என்று எச்சரித்தபடியே அழுது கொண்டிருந்தாள்.

இதற்குள் சாவு வீட்டிற்கு எதிரிலே தாரை, தப்பட்டைகள் முழங்கின. சங்கும் ஊதிக் கொண்டே இருந்தது. சேமகண்டமும் வாசிக்கப்பட்டு அந்த வீடு அழுகுரலோசையுடன் சோகமயமாக இருந்தது.

கிராமத்து மக்களில் சிலர், செத்துப் போனது யாரப்பா? என்று இழவு வீட்டின் திண்ணையிலே உட்கார்ந்து கொண்டிருந்தவர்களைக் கேட்டபோது, “கவுண்டர் வீட்டு விருந்தாளியப்பா அவர், அவருக்கு ஆதரவு யாருமில்லை. ஒண்டிக்கட்டை கலியாணம் ஆகாத தனிக்கட்டை, தனது தம்பியைப் பார்க்க வந்த இடத்தில் திடீரென்று மாரடைப்பு வந்துவிட்டது. போயிட்டாம்பா மனுஷன்” என்று சோகமாகக் கூறி, செய்தியைப் பரப்பிவிட்டார்கள்.

இழவு வீட்டுக்கு வந்தவர்கள் நெருப்பிலே விழுந்த பூப்போல வாடிக்கருகிக்காட்சி தந்தார்கள். அவ்வளவு நல்ல மனிதராம் அவர்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வ._வே._சு._ஐயர்.pdf/8&oldid=1080201" இலிருந்து மீள்விக்கப்பட்டது