உள்ளடக்கத்துக்குச் செல்

Siva Temple Architecture etc./சிற்ப வேலைப்பாடுகள்

விக்கிமூலம் இலிருந்து

தென் இந்தியா சிவாலயங்களிலுள்ள சில அருமையான
சிற்ப வேலைப்பாடுகள்.

மைசூர் ராஜ்யத்திலுள்ள கேதாரீஸ்வரர் கோயில் முதலிய சிவாலயங்களிலுள்ள ஹொய்சல சில்ப விசித்திரங்களைப் பற்றி முன்பே எழுதியிருக்கிறேன. மற்ற இடங்களிலுள்ள சில்ப விசித்திரங்களில் சிலவற்றை இங்கு குறிக்கிறேன். இவைகளை ஹம்பி, தென்காசி, மதுரை, திருநெல்வேலி, முதலிய இடங்களிலிருக்கும் பெரிய கோயில்களில் காணலாம்.

(1) யாளிகளின் வாயில் உருளும்படியான கருங்கற் குண்டுகள்.

(2) பெரிய தூண்களில் சுழலும்படியான சிறு தூண்கள் . (3) முற்றிலும் கருங்கற்களினாலாகிய சங்கிலிகள்.

(4) பெரிய தூண்களில் வெட்டப்பட்ட பல சிறு தூண்களை சுத்தியினாலாவது, கையினால் பலமாகவாவது தட்டினால் சப்த ஸ்வரங்கள் பேசும்படியாக அமைக்கப் பட்டிருக்கிறது.

(5) ஒரே பெரிய கல்லில் செதுக்கப்பட்ட சஹஸ்ர முகலிங்கம், பீமன், அர்ச்சுனன், ரதி, மன்மதன், அகோர வீரபத்திரர், ஊர்த்துவத் தாண்டவ மூர்த்தி, பத்ரகாளி, முதலிய பெரிய உருவங்கள்.

(6) இரட்டைக் கொடுங்கைகள் ; இவைகளைக் கருங்கல்லில் செய்வது மிகவும் கஷ்டமான வேலை; மிகவும் ஜாக்கிரதையாகச் செய்யா விட்டால் ஒடிந்து போகும். இவைகள் ஆவுடையார் கோயிலில் இருக்கின்றன; சாதாரணமாகப் பிற்காலத்து சில்பிகள் வேலை செய்ய ஒப்பந்தம் செய்து கொள்ளும்போது "ஆவுடையார் கோயில் கொடுங்கை நீங்கலாக மற்றெல்லா சில்பங்களையும் செய்கிறோம்"; என்று ஒப்பந்தத்தில் எழுதிக்கொள்வது சகஜம்.

வர்ணம் தீட்டிய சித்திர சில்பம்

வட இந்தியாவில் அஜெண்டா குகைகளில் வர்ணம் தீட்டிய சித்திரங்கள் இருப்பது போல, தென் இந்தியாவிலும், பல பூர்வீக கோயில்களில் வர்ணம் தீட்டிய சித்திரங்கள் வரையப் பட்டன என்பதற்குச் சந்தேகமில்லை. சில வருடங்களுக்கு முன்பாக காஞ்சீபுரம் கைலாசநாதர் கோயில் பிராகாரத்தில் அதே மாதிரியான உருவங்கள் சித்திரிக்கப்பட்டிருப்பதை துப்ரெயில் (Dubreil) துரையவர்கள் க்ண்டு பிடித்திருக்கிறார், அன்றியும் தஞ்சாவூர் பிரஹதீஸ்வரர் கோயிலில் உள் பிராகாரத்தில் அத்தகைய சித்திரங்கள் கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கு முன்பாக, புதுக்கோட்டை சமஸ்தானத்திலுள்ள சிட்டன. வாசல் எனும் இடத்திலும் வர்ணம் தீட்டிய சித்திரங்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.

தற்காலமும் மதுரை, முதலிய ஸ்தலங்களில் ஸ்தல் புராணங்களைப்பற்றிய வர்ணம் தீட்டிய சித்திரங்கள் இருக்கின்றன. வென்பது பலர் அறிந்த விஷயமே.