பக்கம்:Humorous Essays.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஹாஸ்ய வியாசங்கள்

11

படுத்தும்படி கேட்டுக் கொண்டேன். என் எதிரில் உட்கார்ந்திருந்த ஒருவர் தனக்கு இந்துஸ்தானி நன்றாய்த் தெரியுமென்று சொல்லி, அவருடன் பேச ஆரம்பித்தார்

அவரது இந்துஸ்தானி பாண்டித்யம் அடியிற் கண்டவாறு: “சாயபு! தும் எந்துகு ஆ மனுஷி சோடுலொ பண்டு கொண்டிவி” என்று கேட்டார். இதைக் கேட்டவுடன் நமக்கே இந்துஸ்தானி இதை விட நன்றாய்த் தெரியும் போலிருக்கிறதே என்று எண்ணி, என் கொச்சை இந்துஸ்தானியினால் சாயபுவைச் சாந்தப்படுத்தி, அவர் அவ்விடம் உட்காரவும், ஆந்திர தேசத்தார் காலை மடக்கிக் கொண்டு படுக்கவும், ஏற்பாடு செய்தேன்.

இரவெல்லாம் வண்டியிலிருந்தவர்களில் ஒருவராவது தூங்கவில்லை. எனக்கிருந்த வருத்தமெல்லாம் அன்றிரவு முக்கோடி ஏகாதசியாயில்லாமற் போயிற்றே என்றுதான். இருந்தால், வண்டியில் கண் கொட்டாமல் இரவெல்லாம் விழித்திருந்த எங்களுக்கெல்லாம் மிகவும் புண்ணியம் கிடைத்திருக்கும்!

வழியில், ஏதோ ஒரு ஸ்டேஷனில் மேலே உட்கார்ந்திருந்த முஸ்லிம் இறங்க, அவருக்குப் பதிலாக எங்கள் வண்டியில் மூன்று பேர் ஏற ஆரம்பித்தனர். அவர்களில் ஒருவர் இடையர் போலும். அவர் சாயபுவையும் மீறிக் கொண்டு வண்டிக்குள் நழைந்து, தாம் தூக்கிக் கொண்டு வந்த பானையைச் சாமான்கள் வைக்குமிடத்தில் வைத்து விட்டு நின்று கொண்டிருந்தார். அவர்கள் வெளியில் போட்ட சண்டையில் அப்பானை கொஞ்சம் உடைந்து விட்டது போலிருக்கிறது. ரெயில் புறப்பட்டதும், அதிலிருந்த மோர் மெல்ல ஒழுக ஆரம்பித்தது! சொட்டு சொட்டென்று கீழே என் பக்கத்திலிருந்தவர் வாயில் விழ ஆரம்பித்தது. அவர் (பாவம்!) வாயைத் திறந்து கொண்டு தூங்கும் சுபாவமுடையவர் போலிருக்கிறது. "ஏமையா இதி!" என்று கூச்சலிட்டுக் கொண்டு அவர் எழுந்திருக்கையில் தலையை மேலே மோதிக் கொண்டார். . அந்த அதிர்ச்சியில் அங்கிருந்த பானை நன்றாய் உடைந்து மோர் எல்லாம் அவர் தலையில் அபிஷேகம் செய்வது போல் விழுந்தது. அம்மட்டும் அந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Humorous_Essays.pdf/17&oldid=1352391" இலிருந்து மீள்விக்கப்பட்டது