பக்கம்:Humorous Essays.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

ஹாஸ்ய வியாசங்கள்

இதில் தற்காலம் ஒரு வேடிக்கை. சாரதா சட்டம் வந்த பிறகு, சட்டம் எப்படி இருந்த போதிலும் சாஸ்திர யுக்தமாக நடக்க வேண்டும் என்று விரும்பும் வைதீகர்கள், அவர்கள் பெண்களுக்கு பதினொன்று பன்னிரண்டு வயதுதான் ஆகிய போதிலும் பதினான்கு வயதாகி விட்டது என்று சொல்லி கலியாணத்தை நடத்தி விடுகிறார்கள்! கோர்ட்டில் அதற்காக வியாஜ்யம் வந்தாலும் பதினான்கு வயதாகி விட்டது என்று பிரமாணம் செய்வதில் பாபமில்லை என்று நினைக்கிறார்கள்.

பிராம்மணர்கள் அல்லாத ஜாதியர்களிலும் தங்கள் பெண்கள் விவாக விஷயத்தில் வயதைப் பற்றிய ஒரு கஷ்டமிருக்கிறது. முதலியார் முதலிய ஜாதிகளில் பெண் ருதுவடைந்த பிறகே கலியாணமாவது வழக்கமாயிருந்த போதிலும், ருதுவான நாலைந்து வருஷம் கலியாணமாகாதிருந்தால் அது ஒரு குறைவாக மதிக்கப்படுவதால், பெண் பதினேழு பதினெட்டு வயதடைந்த போதிலும், பெண் கேட்க யாராவது வந்தால், பெண்ணுக்கு இப்பொழுதுதான் பதினான்காகிறது என்று தெரிவிப்பார்கள். அன்றியும் இன்னொரு கஷ்டமும் உண்டு. ஒரு முதலியார் பெண்ணுக்கு பதினெட்டு வயதாயிருக்கும், அவளது தாய் தந்தையார் கோரும் வரனுக்கு பதினேழு வயதுதான் ஆகியிருக்கும்; இதற்கென்ன செய்வது? மணமகனுக்கு வயதில் சிறியவளாயிருக்க வேண்டுமென்று, கலியாண தினத்திற்கு முன்பாக எத்தனை வருடங்கள் குறைக்க வேண்டுமோ அத்தனை அரைக்கால் ரூபாய்களை விழுங்கி விடச் செய்கிற புராதன வழக்கம் ஒன்று உண்டு. அப்படிச் செய்தால் வயது குறைந்து போகிறதாம்! அது உண்மையோ அல்லவோவென்று நமது ஆயுர்வேத வைத்தியர்களுக்குத்தான் தெரியும், எனக்குத் தெரியாது.

பிறகு நம்மவர்களில் கவர்ன்மென்ட் உத்தியோகங்களை நாடுபவர்கள், தங்கள் வயதைக் குறிப்பதில் அரிச்சந்திரனுடைய சிஷ்யர்களாக இருப்பது கஷ்டமா யிருக்கிறது. அந்த உத்தியோகங்களில் இன்ன வயதுக்குட் பட்டவர்கள்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்கிற விளம்பரமானது, திடீரென்று அநேகம் பெயரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Humorous_Essays.pdf/38&oldid=1352485" இலிருந்து மீள்விக்கப்பட்டது