பக்கம்:Humorous Essays.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

ஹாஸ்ய வியாசங்கள்

ஆத்திச்சூடி என்பது மிகவும் சிறிய புஸ்தகமாயிற்றே அதில் என்னயிருக்கிறதென்று நீங்கள் எல்லோரும் எண்ணலாம். ஆயினும் எனது பிரசங்கம் முழுவதையும் கேட்ட பிறகு ஆத்திச்சூடியில் இவ்வளவு நூதனமான விஷயங்கள் அடங்கி யிருக்கின்றனவாவென்று நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

முதலில் ‘அறஞ்செய விரும்பு’ என்பதை எடுத்துக் கொள்வோம். சாதாரணமாகத் தமிழ் பண்டிதர்களெல்லாம் அறஞ்செய=தருமத்தைச் செய, விரும்பு=இச்சைப்படு, என்று அர்த்தம் சொல்லுகிறார்கள். இது சாதாரணமான அர்த்தமாகும். இதில் உள்ள சூட்சுமார்த்தம் பலருக்குத் தெரியாது. அறம் + செய + இரும்பு, என்று இதைப் பிரித்துப் பார்த்தால் அப்பொழுதுதான் அது விளங்கும். அறம் என்றால் தச்சர்கள் தட்டான்கள் முதலியோருக்கு மிகவும் உபயோகப்படும் படியான ஒர் ஆயுதம், செய=அதைச் செய்வதற்காக, இரும்பு = இரும்பானது சிருஷ்டிக்கப் பட்டிருக்கிறது, என்பது இதன் இரகஸ்யார்த்தமாகும். இதில் என்ன விசேஷம் என்று நீங்கள் நினைக்கலாம். அதையும் சொல்லுகிறேன் கேளுங்கள். பூர்வீக விஷயங்களைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் சாஸ்திரிகள், இந்தியாவில் முற்காலத்தில் இரும்பு கண்டு பிடிக்கப் படவில்லையென்று, கூறுகிறார்கள். இது தவறு. ஒளவையார் காலத்திலேயே இரும்பானது நமது தமிழ் நாட்டில் கண்டு பிடிக்கப்பட்டிருந்தது என்று, அறஞ்செய விரும்பு என்பதினால் ரூபிக்கலாமல்லவா?

ஓடுவதொழியேல் (ஓதுவதொழியேல்) என்பது ஆத்திச்சூடியில் மற்றொரு வரியாகும். இதனால் நாம் என்ன அறிகிறோம் என்று ஆராய்வோம். ஓடுவது + ஒழியேல் = எந்நேரமும் ஓடிக் கொண்டிரு என்று அர்த்தமாகும், அதாவது அப்யாசம் செய்து கொண்டிரு என்று பொருள் படும். அதாவது மனுஷ்ய சரீரத்திற்கு வியாயாமம் அதி அவசியம் என்று எல்லோரும் ஒப்புக் கொள்ளுகிறார்கள். அதிலும் பெரும் நடையாய் நடப்பது அதாவது ஒடுவது மிகவும் உடம்பிற்கு நன்மையைத் தருகிறது என்று மேநாட்டார் கூறுகிறார்கள். இந்த சூட்சுமம் நமது பாட்டி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Humorous_Essays.pdf/44&oldid=1352940" இலிருந்து மீள்விக்கப்பட்டது