பக்கம்:Humorous Essays.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

யாருக்கு முன்பே தெரிந்திருக்கிறது; அதனால்தான் “ஓடுவதொழியேல்” என்று நமக்கு புத்திமதி கூறியிருக்கிறார்கள். இதையே வற்புறுத்தும் பொருட்டு மற்றோரிடத்தில் ஒளவையார் “ஓடாமல் (ஓதாமல்) ஒரு நாளுமிருக்க வேண்டாம்” என்றும் கூறியிருக்கிறார்கள்.

பிறகு “இளமையிற் கல்” என்பதை எடுத்துக் கொள்வோம். இளமையில்-கல்=சின்ன வயதில் கல்லை சாப்பிடு என்று அர்த்தம் அதாவது கல்லைத் தின்ன வேண்டுமென்பதல்ல; கல்லைப் போன்ற கடினமான பதார்த்தங்களைப் புசித்தாலும் ஜீரணித்துக் கொள்ளும்படியான அவ்வளவு சக்தியுள்ளவனா யிருக்க வேண்டுமென்று பொருள்; தமிழ் பாஷையை நன்றாயறியாத சிலர் இதற்கு வேறு அர்த்தம் செய்கின்றனர்.

நமது தற்கால ஆத்திச்சூடி புஸ்தகங்களில் “ஈயது விலக்கேல்” (ஈவது விலக்கேல்) என்று அச்சிடப் பட்டிருக்கிறது. ஈ十அது十விலக்கேல், என்று இதைப் பிரிக்க வேண்டும். அப்பொழுது இதற்கு என்ன அர்த்தமாகும்? ஈயை விலக்காகே என்றாம்! ஈயை எடுத்து விடாமல் சாப்பிட்டால் உடனே வாங்கிதான் வரும்! இது சிறு குழந்தைகளுக்குக் கூடத் தெரியும் ‘கண்ணாம்பூச்சி’ யாட்டத்தில் அவர்களை “ஈ விழுந்ததா? எறும்பு விழுந்ததா? எடுத்து விட்டு சாப்பிட்டாயா? எடுக்காமல் சாப்பிட்டாயா?” என்று கேட்டால், ஈ விழுந்தால், எடுத்து விட்டு சாப்பிட்டேன் என்றுதான் பதில் சொல்வார்கள். ஆகவே இந்த உண்மை நமது மூதாதையாகிய பாட்டியாருக்குத் தெரியாமலிருக்குமா? ஆகவே அவர்கள் “ஈயது விலக்கு” என்றுதான் எழுதியிருக்க வேண்டும் என்று தோற்றுகிறது.

“உடையது விளம்பேல்” என்பது ஒரு அருமையான வரியாம். இதற்கு அர்த்தம், உன் இடத்திலுள்ள பொருளைப் பற்றி ஒருவருக்கும் தெரிவிக்காதே என்றாம். இதனால் நாம் அறிந்து கொள்ளக் கூடியதென்ன? அக்காலத்தில் கூட வருமான வரியிருந்திருக்க வேண்டுமென்பதாம்! நம்முடைய கையில் இவ்வளவு பொருள் இருக்கிறதென எல்லோர்க்கும் தெரிவித்தால், உடனே அரசாங்கத்தார் அதிக வரி போடுவார்களல்லவா? இக்காரணம் பற்றிதான். அநேகம் பெயர் தற்காலத்திலும் தங்கள் வரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Humorous_Essays.pdf/45&oldid=1359578" இலிருந்து மீள்விக்கப்பட்டது