பக்கம்:Humorous Essays.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48

ஹாஸ்ய வியாசங்கள்


வையா, என்னை இளுக்கிறைக!-அவர் பேசிய எளவு என் காதிலே ஒரு எளவும் விழலே-எனக்கோ, காது எளவு கொஞ்சம் மத்திபம், நான் என்ன எளவு பேசரது" என்றார்.

அதன் மீது அங்கிருந்த பஞ்சாட்சர செட்டியார் என்பவர் "ஐயா, அவர் பேசினதெல்லாம் என் காதுலே விளுந்தது! இந்த எளவு என்கிற பதம் பெரிய எளவாகத்தானிருக்கு, அதை விட வேண்டியது முக்கியமான எளவு என்று எனக்கு தோன்றுகிறது” என்றார். அதன் பேரில் வந்திருந்தவர்களெல்லாம் "ஆமாம் ஆமாம் இந்த எளவு ஒழியட்டும்" என்று கத்தி கைதூக்கினார்கள். பிறகு கூட்டம் கலைந்தது, கலைந்தவுடன் அடுத்த ஊரில் இருந்து வந்த ஒரு. சாயபு, தன் பக்கத்தில் நின்று கொண்டிருந்த ஒரு செட்டியாரைப் பார்த்து சாமி, இந்த மீட்டிங்லே என்னா தீர்மானம் பண்ணாங்க சாமி?" என்று கேட்க, அச் செட்டியார் "அது என்ன எளவோ எனக்குத் தெரியாது-எல்லாரும் கையைத் தூக்கவே நானும் என் கையே தூக்கினேன்” என்று கூறி விட்டு விரைந்து போய் விட்டார். அந்த சாயபு, எப்படியாவது என்ன தீர்மானம் பண்ணினார்களென்று அறிய விரும்பினவனாய், மற்றெரு செட்டியாரை வழிமறித்து "சாமி! நீங்க சொல்லுங்க சாமி! இந்த மீட்டிங்லே என்னமோ எளவு எளவு இண்ணு பேசனாங்களே அது என்னா சாமி?" என்று கேட்டான். அதற்கு அவர் "இந்த கூட்டத்துலே, எளவு என்கிற பதத்தே, யாரும் உபயோகிக்கக் கூடாது இண்ணு தீர்மானிச்சாங்க! இந்த தீர்மானத்திலெல்லாம் அந்த எளவு நம்மெ விட்டுப் போகுமா என்னா?அந்த எளவு, எங்க ஜாதியே விடவே விடாது! அதை விட சுப வார்த்தையாக எல்லாரும் பேச வேணும் இண்ணு-ஒரு-எளவு-தீர்மானம் பண்ணால் நன்னாயிருக்கும்” என்று பதில் கூறிவிட்டுப் போனார்.

 

மு ற் றி ற் று


சென்னை 'பியர்லெஸ்' அச்சுக் கூடத்தில் அச்சிடப்பட்டது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Humorous_Essays.pdf/54&oldid=1360741" இலிருந்து மீள்விக்கப்பட்டது