பக்கம்:Humorous Essays.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

ஹாஸ்ய வியாசங்கள்

கள் அமைக்கப்பட்டிருக்கின்றனவா என்னும் கேள்விக்குப் பதில் கூறட்டும். ஏறக்குறைய இந்தியா முழுவதிலும்-ஏன், இவ்வுலக முழுவதிலும்-ஜலமில்லாத ஸ்நான கட்டம் கிடைப்பது அரிது என்றே சொல்ல வேண்டும். இந்த அருமையான பெருமை நம்முடைய சென்னைக்குத்தான், எனக்குத் தெரிந்தவரையில், உரித்தானது! சிலர், நீந்தக் கற்றுக் கொண்ட பிறகுதான் ஜலத்தில் இறங்குவோம் என்று கூறக் கேட்டிருக்கிறேன். அப்படிப் பட்டவர்களுக்காக இந்த ஸ்நான கட்டம் கட்டப்பட்டதோ என்னமோ? அப்படியானால் முனிஸிபல் சாமான்களை யெல்லாம் இங்கு நிரப்பி வைப்பானேன்? இந்தக் கேள்விக்குப் பதில் இதை வாசிக்கும் நண்பர்கள்தான் கூற வேண்டும்.

(சமீபத்தில்தான் இந்தக் கட்டிடம் நீந்திக் குளிக்கத் திறந்து விடப்பட்டிருக்கிறது.)

பாரீஷ் வெங்கடாசல ஐயர் வீதியில் சுமார் 50,000 வரையில் செலவழித்துக் கட்டப்பட்ட ஒரு கட்டிடம் இருக்கிறது. சில வருடங்களுக்கு முன்பாக சென்னை கவர்னர் ஒருவருடைய மனைவி அக்கட்டிடத்தைத் திறந்து வைத்தார்கள். அச்சமயம் இப்பெருங் கட்டிடமானது சென்னையில் ஜவுளி வியாபாரம் செய்ய உபயோகப்படும்படியாகக் கட்டப்பட்டது; கிடங்குத் தெருவில் இதற்குப் போதுமான வசதியில்லை. இந்தியாவில் மற்றுமுள்ள தலைநகரங்களில் இருப்பது போல சென்னையிலும், ஒரே கட்டிடத்தில் பலவித ஜவுளிகள் விற்பனை செய்ய ஏற்பாடு செய்தல் நலமெனக் கருதி, இதற்கென்று ஒரு கம்பெனி ஏற்படுத்தி, இதைக் கட்டி முடித்தார்கள். இதற்கு ‘பீஸ்-கூட்ஸ் மார்க்கெட்’ (Piece Goods Market) என்று பெயர் வைத்தார்கள். இது திறக்கப்பட்டுப் பல வருஷங்களாகியும் இவ்விடத்தில் ஜவுளி வியாபாரம் நடக்கவேயில்லை! இப்பெரிய கட்டிடத்தில் பல அறைகள் இருந்த போதிலும் ஒன்றிலாவது ஜவுளிகள் இன்றளவும் வைக்கப்படவில்லை! ஆனால் அதற்குப் பதிலாக சில சவுக்கு கட்டை டெப்போக்கள் இருக்கின்றன! நான் எவ்வளவோ யோசித்துப் பார்த்தேன்-ஜவுளிகளுக்கும் சவுக்கு கட்டைகளுக்கும் ஏதாவது சம்பந்தமுண்டா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Humorous_Essays.pdf/6&oldid=1352402" இலிருந்து மீள்விக்கப்பட்டது