பக்கம்:Mixture.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 கண்டக்டர்கள் கவனிக்க வேண்டிய காரியங்கள் நமது சங்கங்களில் கிடையவே கிடையாது. அக்காலங்களிலெல்லாம் ஜீவனுேபாயமாக நாடகமாடும் மேடைகளிலெல்லாம் அயன் ராஜ பார்ட் அல்லது அயன் ஸ்திரீ பார்ட் வருவதானல், பக்கப்படுதா வருகில் மத்தாப்புகளைக் கொளுத்துவார்கள்! மத்தாப்பு எரிகிற வரையில் எல்லாம் ஜகஜ்ஜோதியாயிருக்கும், மத்தாப்பு அணேந்த வுடன் எல்லாம் முன்பிருந்ததைவிட கறுப்பாய்க் காட்டும்! அன்றி யும் ரங்கம் முழுவதும் மத்தாப்புப் புகை சூழ்ந்த ஆக்டர்கள் தொண்டையையெல்லாம் கெடுத்து வைக்கும்; இவ்வழக்கமானது பல வருஷங்களுக்கு முன்னேயே கைவிடப்பட்டது; இதற்கு முக் கிய காரணம் மின்சார விளக்குகள் நமது மேடைகளில் உபயோகத் திற்கு வந்ததேயாம். இந்த மின்சார விளக்குகள் நமது நாடக மேடைகளில் உபயோகத்திற்கு வந்த பிறகு, இன்னுெரு கஷ்டம் வந்து சேர்ந்தது. இந்த எலெக்டிரிக் வெளிச்சங்கள் அழகாயிருக்கிறதென்று, அவை களை இன்ன காட்சிகளில் உபயோகப் படுத்தலாம் இன்ன காட்சி களில் உபயோகப் படுத்தலாகாது, என்று யோசிக்காமல், எல்லாக் காட்சிகளிலும் உபயோகிக்க ஆரம்பித்து விட்டார்கள் ! இவ்விஷயத்தில் என் க ண் ணு க் கண்ட சில ஆபாசங்களை இங்கு எடுத்துக் காட்டுகிறேன் ; ஒரு சபையில் ஒரு ராஜஸ்திரீ பகற்பொழுதில் சிம்மாசனத்தில் உட்கார்ந்து கொண்டு ராஜரீகம் செலுத்தும் காட்சியில், சிம்மாசனத்தின் மீது இந்த விளக்குகள் தொங்கிக் கொண்டிருந்தன; மற்ருெரு சபையில் வேட்டையில்ை களைத்து வழி தெரியாத ஒருவன் ஒர் அரசனுடைய உத்யான வனக் தில் பகற்பொழுதில் உறங்கும் காட்சியில் எலெக்டிரிக் விளக்குகள் கொங்கிக் கொண்டிருந்தன ; மற்ருெரு ரங்கத்தில் காட்டுக் காட்சி யில் வரிசை வரிசையாக இந்த விளக்குகள் தொங்க விட்டிருக் ததைக் கண்ணுற்றிருக்கிறேன். இத்தகைய ஆபாசங்களை யெல்லாம் நமது நாடக மேடையானது அபிவிர்த்தியடைய வேண்டுமென்று விரும்பும் கண்டக்டர்கள் விலக்குவார்களாக, ஒரு காட்சியில் வெளிச் சம் அதிகமாக வேண்டுமென்ருல், இந்த எலெக்டிரிக் விளக்குகளை மறைத்து அவற்றின் ஒளிமாத்திரம் ரங்கத்தில் விழும்படி ஏற்பாடு செய்வது உசிதமாம். அன்றியும் எலெக்டிரிக் விளக்குகள் கண்டு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/49&oldid=727343" இலிருந்து மீள்விக்கப்பட்டது