பக்கம்:Mixture.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க்ண்டக்டர்கள் கவனிக்க வேண்டிய காரியங்கள் 43 பிடிப்பதற்கு ஆயிரம் வருடங்களுக்கு முன் நடந்த கதைகளில் இவ்விளக்குகளே உபயோகிப்பது முற்றிலும் தவருகும். இதிஹாச புராண காலங்களில் பெரிய கிலேவிளக்குகள் உபயோகிக்கப் பட்ட தாக நாம் அறிகிருேம். அப்படிப்பட்ட விளக்குகள் அக்காலத்திய நாடகங்களில் உபயோகிப்பது எவ்வளவு அழகாயிருக்கும்! அன்றியும் தற்கால நாடகமேடைகளில் நடக்கும் மற்ருெரு ஆபாசம்-அத்ெததற்கெல்லாம் அதிர்வெடிகளை உபயோகிப்பதாம். எனக்கு ஞாபக மிருக்கிறவாையில் இந்த வெடிகளை பார்சீ கம்பெனி யார்தான் சென்னையில் சுமார் 40 வருடங்களுக்கு முன் a i Gun Sigi, ali tom prih strazstav (Transformation Scene) இவைகளை அவர்கள் உபயோசித்தனர்; ஒரு காடானது பூக் தோட்டமாகவோ, ஒரு ஸ்மசானமானது அரண்மனேயாகவோ மாறும் தருணத்தில், எககாலத்தில் முன்னிருக்த படுதா, துண்டு கள், முதலியவற்றை யெல்லாம், மாறச் செய்வ ற்கு இந்த வெடி கள் அனுகுண மாயிருந்தன. அன்றியும் ஏதோ மந்திர சக்தியினுல் ஒரு குகைவெடித்து உத்யானவனமாக மாறும்பொழுதோ, அல்லது இல் ரிஷியின் சாபத்தில்ை ஒரு மாளிகையானது பாழடைந்து காடாகும் பொழுதோ, இத்தகைய சந்தர்ப்பங்களில் இவ்வெடிகளை உபயோகித்தல் தவருகாது, பொறுத்தமாகவு மிருக்கும், வினுேத மாயு மிருக்கும்; இதையறியாது இவை சபையோர்ை பிரமிக்கவும் ஆச்சரியப்படவும் செய்கிறதே யென்று, எல்லாக் காட்சிலும் அசங் தர்ப்பமான இடங்களிலும் உபயோகித்தல் ரசாபாசமாம். சில சபை களில், அயன் ராஜ பார்ட் வரும்பொழுது-வெடீல் அயன் ஸ்திரி பார்ட் வரும்பொழுது-வெடீல் விடுதிப்பற்றி எரிவதற்கு ஒரு வெடீல் இம்மாதிரியாக வெடில்களை உபயோகிப்பது மிகவும் அனு சிதமாம். இதை நினைக்கும்போது கோயில்களில் ஸ்வாமி புறப்படும் பொழுது வெடீல்கள் போடுகிருர்களே அது ஞாபகம் வருகிறது. நான் பார்த்த ஒரு நாடகசபையில் ஒரு முக்கிய ஆக்டர் பாட்டு ஒன்றை ஆரம்பிப்பதற்காக ஒரு வெடீல் போடப்பட்டது! இனியா வது இப்படிப்பட்ட அசந்தர்ப்பமான சமயங்களில் கண்டக்டர்கள் இந்த வெடீல்களை உபயோகிக்கா திருப்பார்களாக, நான் அறிந்த சபைகளில் அடிக்கடி இந்த வெடில்களையும், பாண வேடிக்கைகளையும் உபயோகப்படுத்தும் ஒருவருக்கு வெடில்...ஐயர் என்றே பெயர் வைத்திருந்தார்கள். . . . மேலே எடுத்துக் காட்டிய குற்றங்களை யெல்லாம் கண்டக் டர்கள் கவனித்து, நமது நாடகமேடையை சீர்திருத்துவார்களென எண்ணியே இவற்றைப் பற்றி சற்று விசிதமாக எழுதலானேன். ---ంaభి:36-*

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:Mixture.pdf/50&oldid=727345" இலிருந்து மீள்விக்கப்பட்டது