பக்கம்:Over Forty Years Before The Footlights-1.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 நாடகமேடை நினைவுகள் மிகவும் வருந்தி வெகுண்டெழுந்ததாக மிகவும் சாதுர்யமாகவும் அழகாகவும் கூறிஞர். அக் கதையில் இந்த பாகம் என் மனதை மிகவும் உருக்கியது. உடனே இக்கதையை நாடகமாக எழுத லாமா என்று அன்றிரவு யோசிக்க ஆரம்பித்தேன். அக்காலம், எதாவது நல்ல பாட்டைக் கேட்டால், இதை நமது சபையில் எந்த நாடகத்தில் உபயோகிக்கலாம்? ஏதாவது அழகிய பொ ருளைப் பார்த்தால், இதை சமது நாடகமேடையில் எந்தக் சாட்சியில் உபயோகிக்கலாம் யாராவது அழகிய சிறுவனப் பார்த்தால் இவனே எப்படி நமது சபையில் அங்கத்தினனுகச் சேர்த்துக் கொள்ளலாம் : இவன் எந்த நாடக பத்திரத்திற்கு உபயோகப்படுவான் ? என்று இம்மாதிரியே, எண்ணிக்கொண்டி ருந்ததால், (இந்தப்பழக்கம் இன்னும் என்னேவிட்டு அகல வில்லை யென்றே நான் கூறவேண்டும்) துருவ சரித்திரத்தை காட கமாக எழுதவேண்டுமென்று என் மனதில் உதித்தது ஒர் ஆச் சரியமன்து. இப்படி நான் யோசித்துக்கொண்டிருக்கையில் அச்சரித்திரம் நாடகமாடுவதற்கு மிகவும் சிறிதாயிருக்கிறதென அந்த எண்ணத்தை விட்டேன். ஆயினும் அவன் தன் தாயாருக்கு நேரிட்ட வருத்தத்தைக் குறித்து வெகுண்டெழுந்த காட்சி, என் மனதில் உறுத்திக் கொண்டேயிருந்தது. திடீரென்று, இவ்வாறு அவமானம் செய் தவள், சிற்றன்னேயாயிராத கேவலம் ஒரு வேசியாயிருந்தால், அவனுக்கு இன்னும் எவ்வளவு கோபம் வரும் என்று தோன்றி யது. உடனே ஒரு ராஜகுமாரனே அவன் தந்தை முன்னிலை யில், அந்த அரசனது வைப்பாட்டி, வேகி மகனெனவைதால், எப்படியிருக்குமென, என் மனதிற் பட்டது. அந்த ராஜகுமா ான் எவ்வாறு வெகுண்டெழுவான் என்ற அக்காட்சியை என் மனதில் எண்ணிப் பார்க்தேன். இதுதான் 'மனேஹசன் நாட கத்தின் கதை என் மனதில் உற்பவித்ததற்குக் காரணம். இனி படிப்படியாக இந் நாடகக் கதை விரிந்ததைச் சற்று விவரமாகக் கூறுகிறேன். - மனுேஹான் தாயாரை, மிகுந்த உத்தம ஸ்திரீயாக்கினுல், அவளை வேசியென ஒருத்திவைவது, கேட்பவர்கள் மனதிலெல் லாம் ஆக்கிாக கதை உண்டு பண்ணுமென எண்ணி, நான் எ திய, ஸ் கிரீரத்னங்களுக்குள் எல்லாம் சிறந்தவர்களாக, 'பத்மா வதி தேவியைக் கற்ப்னே செய்தேன், இவர்களுடையகு ணுதிசயங். களைப்பற்றி வரைவதில் என் அருமைத் தாயாரின் குண்ங்கள் எனக்கு மிகவும் உபயோகப்பட்டன. மைேஹான் தக்கை, அரண்மனே தாசி இருத்தியின் வலையில்கப்பட்டது. தவிர, மற்ற.